பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. நாகசாயி மந்திர்

நாம் யார்க்கும் குடி அல்லோம்,
நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்
நடலை இல்லோம்,
ஏமாப் போம், பிணி அறியோம்
பணிவோம் அல்லோம், இன்பமே
எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லாத்
தன்மையான சங்கரன்நற்
சங்க வெண் குழை ஒர்காதில்
கோமற்கே நாம் என்றும்
மீளா ஆளாய் கொய்மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே

என்பது பிரபலமான ஒரு தேவாரப்பாடல். இதைப் பாடியவர் அப்பர் பெருமான் என்னும் நாவுக்காசர். சமணாயிருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், அவரை துன்புறுத்தியதோடு, தன் முன் ஆஜர் ஆகும்படி கட்டளை பிறப்பித்தபோது அத்தகைய உத்திரவை எதிர்த்துப் பாடிய பாடல் என்பர். நாம் யார்க்கும் குடி அல்லோம் தமனை அஞ்சோம், என்று பாடும் தெம்பு ஒருவருக்கு இருந்தது என்றால் அது அவரது அஞ்சாமையையும் அவர் உள்ளத்தில் இருந்த உறுதியையுமே காட்டுகிறது. இதே உறுதி மற்ற மக்கள் உள்ளத்திலும் எழுவதற்கு அது உதவி செய்ய வேண்டாமா?

இறைவன் பால் நம்பிக்கை ஏற்படுவது என்பது எளிதான காரியமா என்ன. நாமெல்லாம் கடவுள்