பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

129

நம்பிக்கை உள்ளவர்கள்தாம். ஆனால் அந்தக் கடவுள் நம்பிக்கை உரம் பெற்றதாக இல்லையே. தலைவலி என்ற உடனேயே, ஆஸ்ப்ரோ மாத்திரையைத் தேடித் தானே ஓடுகிறோம். நமச்சிவாயா, நமோ நாராயணாய என்று சொல்லி தலைவலியை விரட்டி அடிக்கும் மனப்பக்குவம் நமக்கு இல்லையே. இந்த நிலையில் ஒரு பெரியார் “நானிருக்கப்பயமேன்“ என்ற தாரக மந்திரத்தை ஓதி அதன் மூலம் நமது அசலங்களை எல்லாம் போக்கி, அருளும் ஆற்றல் பெற்றிருந்தால் அப்பெரியாரை நோக்கி மக்கள் எல்லாம் ஓடுவதில் வியப்பில்லையே! அந்த தார்க மந்திரத்தை ஓதி தன் பக்தர்களை எல்லாம் அஞ்சாது. காக்கும் அருள் வள்ளல் தான் சாயிபாபா.

அது என்ன சாயிபாபா, பேரைக் கேட்டால் முஸ்லிம் பக்கிரியின் பெயர் போல் அல்லவா இருக்கிறது என்கிறீர்களா? ஆம் கிட்டத்தட்ட 150 வருஷங்களுக்கு முன்னால் நைஜாம் ராஜ்யத்தை சேர்ந்த பாத்ரி என்ற ஒரு சிற்றூரில் ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்து பின்னர் ஒரு முஸ்லீம் பக்கிரியால் வளர்க்கப்பட்டு, இன்றை பம்பாய் ராஜ்யத்தில் கேஸர் தான் பக்கத்தில் உள்ள சீரடி என்னும் தலத்தில் வந்து தங்கியிருந்த பெரியார் அவர். இந்து முகமதியர் வேற்றுமைகளை எல்லாம் கடந்தவர். ராமும் ரஹீமும் அவருக்கு ஒன்றே. இன்று சீர்டியிலும், ஏன் இந்திய நாடு முழுவதிலுமே அவரை எண்ணிறந்த இந்துக்களும் முகம்மதியர்களும் தெய்வமாகவே போற்றி வருகின்றனர்.

அவரை வழிபடுவதால் நோய் நீங்குகின்றனர். துன்பம் தவிர்கின்றனர். இன்னும் எண்ணிய எண்ணியவாறு எய்திவாழும் பேற்றையும் பெறுகின்றனர். இவர் சீரடியில் இருந்தபோது பல அற்புதங்கள் நிகழ்த்தினார் என்பர். அவர் தங்கியிருந்த மசூதியில் ஒரு நந்தா விளக்கை எரித்து