பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வேங்கடம் முதல் குமரி வரை

சொன்னவர்கள், எண்ணினவர்களுக்கு எல்லாம் காட்டியிருக்கின்றனர், தமிழ்நாட்டுக் கலைஞர்கள்.

தாண்டவ வடிவங்களில் சிறப்பாயிருப்பது உடல் உறுப்புகளின் அசைவுகளே. அதனையே கரணம் என்கிறோம். இந்த கரன வகைகள் 108 என்று, பரத சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த 108 கரணங்களையே தாண்டவ லக்ஷணமாக கல்லில் பொறித்து வைத்திருக்கிறார்கள், தில்லைத் திருச்சிற்றம்பலவன் கீழக் கோபுர வாயிலிலே. இந்த கோபுரம் கட்டப்பட்டது 13-ம் நூற்றாண்டிலே என்று சரித்திர ஏடுகள் கூறும்.

அதற்கும் முந்நூறு வருஷங்களுக்கு முன்பே, இந்த தாண்டவ வடிவங்களைத் தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானமாகிய தக்ஷிண மேருவின் முதல் தட்டிலே, உள் பக்கத்திலே கல்லில் உருவாக்கி வைக்க மூனைந்திருக்கிறான், அந்த சிவபாத சேகரன் ராஜராஜன், ஆனால் என்ன காரணத்தாலோ, 81 வடிவாங்களே பூர்த்தி செய்யப் பட்டிருக்கின்றன. மற்றவைகளை செதுக்க விரும்பிய கல் எல்லாம் வெறும் கற்களாகவே கட்டிடத்தில் நின்று கொண்டிருக்கின்றன.

இன்னும் இந்த நூற்று எட்டு தாண்டவ வடிவங்களில் முக்கியமானவை பன்னிரண்டு. அவையே ஆனந்த