பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

139

குள்ள ஆனந்த தாண்டவர் அழகானவர், பிரபலமானவர், அவரையும் விஞ்சும் அழகோடு அன்னை திரிபுர சுந்தரியையும் உடன் அழைத்துக் கொண்டு நம்முன் வருகிறார் இந்தத் திரிபுர தாண்டவர்.

இந்த வென்றாடு திருத்தாதையும், வியந்து கை துடி கெட்ட, நின்றாடும் மழகளிறாக விளங்குபவர் தாண்டவ விநாயகர். இவர் இருக்கிறார், கும்ப கோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலே. நல்ல காத்திரமான வடிவில் இவரைப் போல எண்ணற்ற தாண்டவ விநாயகர் ஓர் இஞ்சு உயரம் முதல் மூன்றடி வரை பல கோணங்களில் உருவாகியிருக்கிறார் அங்கே. அக்கோயிலை அமைத்த சிற்பி இத்தாண்டவ விநாயகரையே தன் முத்திரையாக வைத்திருக்கிறான்.

இப்படி, தந்தையும் மகனும் தான் தாண்டவம் ஆடுகிறார்கள் என்றில்லை. பரந்தாமனின் அவதாரமான கண்ணனும் பல தாண்டவ வடிவங்களிலே நமக்கு காட்சி தருகிறான். அவைகளில் சிறப்பானவை காளிங்க தாண்டவம், நவநீத தாண்டலம் என்பவையே. சோழ வளநாட்டிலே திருச் சேறையிலே ஒரு காளிங்க தாண்டவர் மடுவும் காளிங்கனும் இல்லாமலே தாண்டவம் ஆடும் திருக்கோலம் அது.