பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வேங்கடம் முதல் குமரி வரை

எல்லாம் வல்ல இறைவன் எவ்வளவு பெரியவன்! அவன் கோமகனுக்கெல்லாம் கோமகன் அல்லவா? அக்கோமகனைக் குடியிருத்த அவன் தகுதிக் கேற்ற முறையில் அவன் இல்லம் அமைய வேண்டுமல்லவா? அது காரணமாகவே வானளாவ வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் கோயிலை. பழந்தமிழ் நாட்டில் இந்தக் கோயில்கள் ஒப்பற்ற நிலையங்களாக விளக்கியிருக்கின்றன.

கோயில்கள் எல்லாம் முதல் முதலில் சமயச் சார்புடையவைகளால் வேதான் உருவாகியிருக்கின்றன. கோயில் கட்டுவது ஒரு சிறந்த தருமம், கோயில் நிர்மாணம் சப்தசந்தானத்தில் ஒன்று என்றெல்லாம் மக்கள் நம்பியிருக்கிறார்கள். சாஸ்திரங்களை வேறே எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்படிச் சமயச் சார்பு பற்றி எழுந்த கோயில்களில் பழஞ் சரித்திரத்தைப் பார்த்தால், பல நூற்றாண்டுகளாக மக்களுடைய சமுதாய, பொருளாதார கலை வாழ்விற்கெல்லாம் அவை அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கின்றன. மன்னர்கள் மாறலாம். ஆட்சிகள் மாறலாம், நாடே நிலை பிறழலாம். அப்போதும் கூட மக்களின் நல்வாழ்விற்கு இந்தக் கோயில்கள் ஒரு நிலைக்களனாக நின்றிருக்கின்றன. மக்கள் தங்கள் தங்கள் வீட்டையும் தங்களை ஆளும் அரசனது கோட்டையையும் விட, கோயிலே சிறந்த பாதுகாப்புத்தளம் என்று நம்பியிருந் திருக்கின்றனர். இதையெல்லாம் நாட்டின் சரித்திரம் நன்கு எடுத்துக் கூறுகிறது.

நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்கியஸ்தானம். வகித்திருக்கின்றன. எந்த ஊரிலும், ஊருக்கு நடுவில்தான் கோயில். அதைச் சுற்றிச் சுற்றித்தான் வீதிகள் மதுரையைப் பாருங்கள் நகர நிர்மாணத்திற்கே சிறந்த எடுத்துக்