பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

145

காட்டு என்றல்லவா மேல் நாட்டு அறிஞர்கள் புகழுகிறார்கள். ஒரு குத்துக்கல்லை நாட்டியா அதைச் சுற்றி வீதி அமைப்பார்கள்? நகரத்திற்கே நடுநாயகமாய் எல்லா மக்களையும் தன்பால் இழுக்கவும், அங்கிருந்தே பல இடங்களுக்கு அனுப்பவும் உதவும் ஒரு ஸ்தாபனம் கம்பீரமாகத்தானே எழுந்து நிற்க வேண்டும்.

நான்கு திசைகளில் வாயில்கள் அமைத்து, வாயில்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்கள் எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடத்தையே அல்லவா உருவாக்கி விடுகிறார்கள். இந்தக் கோயில் நிர்மாணத்தில்.

கோயில்கள் எழுந்த உடனே அதைச் சுற்றி வீதிகள். எழுந்திருக்கின்ற வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக் கின்றன. வியாபாரம் வலுக்கவலுக்க நாட்டின் வளமும் பெருகியிருக்கிறது. பல நாட்டு வியாபாரிகள் தங்கள். தங்கள் நாட்டுப் பண்டங்களை கொண்டு வந்து கொடுத்து, தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப் போக வந்திருக்கிறார்கள். இப்படி வருகின்றவர்களுக்கு இன்ன காலத்தில் இன்ன பொருள் இங்கே கிடைக்கும், இந்தச் சமயத்தில் இந்த இடத்தில் இவர்கள் எல்லாம் கூடுவார்கள் என்று தெரிந்து கொண்டால் தானே, இந்தப் பண்ட மாற்றுக்கு வசதியாக இருக்கும். இப்படித் தானே சந்தைகள், திருவிழாக்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. கோயிலை ஒட்டி உத்சவங்களும் இதுகாரணமாகத்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன பொருளாதாரக் கண்கொண்டு நோக்கினால் ஒவ்வொரு உத்சவமும் ஒவ்வொரு பெரிய சந்தைதான், கூட்டுறவு 'கான் பரன்ஸ்' தான்.

பல நாட்டு மக்கள் இப்படி வந்து கூடக் கூட அவர்கள் தங்க சத்திரங்கள் எழுந்திருக்கின்றன. அவர்களுக்கு