பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணவளிக்க அன்ன தானங்கள் நடத்திருக்கின்றன. கோயிலை ஒட்டிக் குளங்களும், குளங்களை ஓட்டி தந்த வனங்களும் தோன்றியிருக்கின்றன. இதை யெல்லாம் நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாய் நடக்க பணத்தையும் பொருள்களையும், ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். நிலங்களை மான்யமாக எழுதி வைத்திருக்கிறார்கள். தேவதானங்களும், தேவ போகங்களும் நிலை பெற்றிருக்கின்றன. பல இடங்களிலிருந்து வந்தவர்களும் பொன்னையும் பொருளையும் காணிக்கையாக கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் பண்ட மாற்று கோயிலைச் சுற்றிச் சுற்றியே நடந்து வந்திருக்கிறது.

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கின்றது. கைத்தொழில் பெருகியிருக்கின்றது. கட்டிட நிர்மாணத்தில் கை தேர்ந்த கல் தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள், வல்லுநர்கள், கலைஞர்கள், வர்ண வேலைக்காரர்களுக்கெல்லாம் கோயில்கள் தக்க ஆதரவாய் இருந்திருக்கின்றன, இதனால் பரம்பரை வேலைக்காரர்கள் பெருகியிருக்கிறார்கள். இன்னும் கோயில்கள் கலாக்ஷேத்திரங்களாக, கலைப் பண்ணைகளாக வளர்ந்திருக்கின்றன, இசையும் நடனமும், கோயில்களின் நித்யோஸ் தவத்திலேயே பங்கு பெற்றிருக்கின்றன.

கல்விச்சாலைகளையும், பொருட்காட்சி சாலைகளையும் தன்னுள்ளேயே வைத்திருக்கின்றன இந்தக் கோயில்கள். வியாக்யான மண்டபம், வியாகரண மண்டடம், சரஸ்வதி பண்டாரங்கள் எல்லாம் இந்த கோயில்களுக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

தென்னாற்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும் செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக் கூடலிலும் பெரிய