பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

147

பெரிய கலாசாலைகளே நடத்திருக்கின்றன. எண்ணாயிரம் கோவிலுக்கு முன்னூறு ஏக்கர் மான்ய நிலம் இருக்கிறது. எல்லாம் அங்கு நடந்த சமஸ்கிருத பாடசாலையை நடத்தத்தான், 340 மாணவர்களுக்கு, தங்க இடமும் உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாகவே அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 340 மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க பதினைந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாணவருக்கும் தினசரி 4 1/2 சேர் படி நெல் வீதம் கணக்கிட்டு வழங்கியிருக்கிறார்கள். மற்றும் செலவுகளுக்கென வருஷத்திற்கு ஒரு முறை, அரைக் களஞ்சிப் பொன் வேறே வழங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் பொது மக்கள் கொடுத்த இனாம்களிலிருந்தே தான் நடந்து வந்திருக்கிறது. திருமுக்கூடலில் இருந்த பள்ளி இத்தனை சிறப்பு வாய்ந்தல்லாவிட்டாலும் 60 மக்கள் படித்துப் பலனடைய உதவியாயிருந்திருக்கிறது. ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், கோயிலைச் சேர்ந்த மற்ற பணிகளையும் செய்து ஊதியம் பெற்றிருக்கின்றனர். இப்படியே பல இடங்களில் பல கல்விச் சாலைகள் கோயில்களின் ஆதரவிலேயே நடந்து வந்திருக்கின்றன.

மக்களது அறிவு விருத்திக்குக் கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே உடல் நலம் கருதி, மருத்துவ சாலைகளும், கோயில்களுக்குள்ளேயே இருந்திருக்கின்றன. 11ம் நூற்றாண்டில் உள்ள சோழக் கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்தவர், ஒரு ரண வைத்தியர், இரண்டு தாதியர் இன்னும் இதர சிப்பந்திகள், எல்லோரையும் வைத்து மருத்துவசாலை ஒன்று நடத்தி வந்திருக்கிறது ஒரு கோயில். மருந்துகளும் மூலிகைகளும் கூட ஏராளமாக அங்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதோடு, கால்நடை மருத்துவத்திற்கு கூட