பக்கம்:வேட்டை நாய்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வேட்டை நாய்


ராம். அவர் வரும்போது அவருடன் கூட நீயும் போகலாம்......”

“ஆமாம், அந்தத் தாத்தா அதுமட்டுமா சொன்னார்? யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால், ஐந்தாறு வருஷங்களாக உள்நாட்டு விஷயங்களை மாமா கவனிக்க முடியாமலை போய்விட்டதாம், இப்போதுதான அவர் அவற்றையெல்லாம் கவனிக்கிறாராம். அதனால் வேலை அதிகமாக இருக்கிறதாம். வேலை அதிகமாக இருக்கும் போது, மாமா எப்படிச் சீக்கிரத்தில் இங்கு வர முடியும்? நான் போய், அவரை அழைத்து வருகிறேன். விடை கொடு, அம்மா!”

அம்மா எவ்வளவோ கூறிப் பார்த்தாள். ஆனால் அந்தச் சிறுவன் விடவில்லை. அம்மாவைச் சமாதானப்படுத்தி, ஒருவழியாக அவளுடைய அனுமதியைப் பெற்றுவிட்டான்!

*** *** ***

ஸெதாந்தா-- இதுதான் அந்தப் பையனின் பெயர். அவனுக்கு வயது இன்னும் ஒன்பது கூடப் பூர்த்தியாகவில்லை. அந்த வயதிலேயே அவன் மிகவும் தைரியசாலியாக இருந்தான்.

ஸெதாந்தாவின் மாமாதான் அந்த நாட்டு அரசர். அந்த நாட்டுக்கும், அடுத்த நாட்டுக்கும் ஐந்தாறு ஆண்டுகளாகக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.

போர் ஆரம்பமாவதற்கு முன்பு, தலைநகரிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/10&oldid=499939" இலிருந்து மீள்விக்கப்பட்டது