பக்கம்:வேட்டை நாய்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

11

 அன்று இரவு அங்த வியாபாரி ஸெதாந்தாவின் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் கூறியதைக் கேட்டதிலிருந்துதான் ஸெதாந்தாவுக்கு மாமாவின் ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

*** *** ***

ஸெதாந்தா காடுகளைக் கண்டு கலங்கிவிடவில்லை, மலைகளைக் கண்டு மலைத்துவிடவில்லை; ஆறுகளைக் கண்டு அயர்ந்துவிடவில்லை. தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் எல்லாவற்றையும் எளிதிலே கடந்து தலைநகருக்கு வந்து விட்டான்!

தலைநகரை அடைந்ததும், அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ‘ஆ! நாம் தலை நகரை அடைந்துவிட்டோம்! நம் மாமாவை இன்னும் சிறிது நேரத்தில் காணப் போகிறோம்; மாமாவின் பிள்ளைகளுடன் அளவளாவி மகிழப் போகிறோம்’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டே அரண்மனையை நோக்கி நடந்தான்.

அரண்மனையை அவன் நெருங்கும் சமயம். அப்போது, அங்கிருந்த மைதானத்தில் சில சிறுவர்கள் ஹாக்கி விளையாடிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். உடனே, அவர்கள் விளையாடும் இடத்திற்கு அருகே சென்றான்; கூர்ந்து பார்த்துக்கொண்டே நின்றான்.

அங்கே விளையாடுபவர்களில் மூன்று சிறுவர்கள் ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர். ஆடம்பரமாகவும், அழகாகவும் அவர்களுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/13&oldid=499318" இலிருந்து மீள்விக்கப்பட்டது