பக்கம்:வேட்டை நாய்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வேட்டை நாய்


உடைகள் இருப்பதைக் கண்டதும், இவர்கள் தான் நம்முடைய மாமாவின் பிள்ளைகளாக இருக்கவேண்டும். கூட விளையாடுபவர்கள் பிரபுக்களின் குழந்தைகளாக இருக்கலாம் என்று நினைத்தான், ஸெதாந்தா.

அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று ஆட்டத்தைக் கவனித்தான். ஆட்டம் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஆட்டத்தைப் பார்க்கப் பார்க்கத் தானும் அவர்களுடன் சேர்ந்து பந்தாட வேண்டுமென்று துடி துடித்தான்.

அப்போது, ஒருவன் தன் கையிலிருந்த மட்டையால் (Hockey stick) ஓங்கிப் பந்தை அடித்தான். பந்து தரையில் வேகமாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிரில் நின்ற இன்னொரு சிறுவன் அதை எதிர்த்து அடிக்க முயன்றான். ஆனால், அவனது குறி தவறி விட்டது. பந்து அவனையும் தாண்டி வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்தப் பந்தைக் கண்டதும், ஸெதாந்தாவினால் சும்மா இருக்க முடியவில்லை. குபீரென்று விளையாட்டு எல்லைக்குள் பாய்ந்தான். தன்னுடன் கொண்டுவந்திருந்த பந்தடிக்கும் மட்டையால் அந்தப் பந்தை எதிர்த்துப் பலமாக அடித்தான். அடித்ததோடு நிற்கவில்லை; அதைத் தொடர்ந்து ஒடவும் ஆரம்பித்தான்.

பூசை வேளையில் கரடி புகுந்தது போல், எவனோ ஒர் அன்னியன் திடீரென்று ஆட்டத்தில் வங்து புகுந்ததைக் கண்டதும், அந்தச் சிறுவர்கள் எல்லோரும் கூச்சல் போட ஆரம்பித்தனர். சிலர் அவனைப் பிடித்து இழுத்து நிறுத்த முயன்றனர்; முடியவில்லை. அவன் எல்லோரையும் தள்ளிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/14&oldid=499319" இலிருந்து மீள்விக்கப்பட்டது