பக்கம்:வேட்டை நாய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

13



கொண்டு பந்தைத் தொடர்ந்து ஓடினான். கோபம் கொண்ட சிலர் அவனைப் பிடித்து அடிக்க ஓடினர்.

கூச்சல் பலமாகக் கேட்கவே அரண்மனைக் குள்ளிருந்த அரசர் உப்பரிகை வழியாக எட்டிப் பார்த்தார். எவனோ ஒரு சிறுவன் அங்கு வந்து ஆட்டத்தைக் கலைப்பதாக அறிந்தார். உடனே, சேவகர்களை அனுப்பி அவனைப் பிடித்து வர உத்தரவிட்டார்.

சேவகர்கள் ஸெதந்தாவைப் பிடித்து வந்தனர்; அரசர் முன் நிறுத்தினர்.

அரசர் அவனைப் பார்த்து, “ஏ பையா, நீ யார்?” என்று கோபமாகக் கேட்டார்.

“அரசே, நான் யாரென்பது தெரிந்தால் தாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்!” என்று தலைநிமிர்ந்து கூறினான், ஸெதாந்தா.

“என்ன!... அப்படியா !”

“ஆம் அரசே! இந்த நாட்டுக்காகத் தம் முடைய உயிரையே கொடுத்த மாபெரும் வீரனின் மகன்தான் நான்!”

இதைக் கேட்டதும், அரசருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும், அவருக்கு அவன் யார் என்பது சரியாகத் தெரியவில்லை.

“என்ன! உன் தந்தை இந்த நாட்டுக்காக உயிரைக் கொடுத்தாரா?”

“ஆம், என் தந்தை நாட்டுக்காக உயிரைக் கொடுத்தார். என் தாய் இந்த நாட்டு அரசரின் கூடப் பிறந்தாள்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/15&oldid=499320" இலிருந்து மீள்விக்கப்பட்டது