பக்கம்:வேட்டை நாய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வேட்டை நாய்


பந்தைத் தெருவில் போட்டு, மட்டையால் அடித்துக்கொண்டே சென்றான். விளையாட்டாகச் சென்றதால், வெகு சீக்கிரத்தில் பிரபுவின் பங்களாவை நெருங்கிவிட்டான்.

பங்களாவை நோக்கி அவன் வருவதைக் கண்டதும், அங்கு காவல் காத்துக் கொண்டிருந்த வேட்டை நாய் குரைக்க ஆரம்பித்தது. அதன் பெரிய உடலையும், கனத்த குரலையும், கத்தி போன்ற பற்களையும் யாராவது பார்த்தால், உடனே பயந்து விடுவார்கள். ஆனால், ஸெதாந்தாவா அதற்கெல்லாம் பயப்படுகிறவன்? பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு, நாய் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

பயப்படாமல் அவன் அருகே வருவதைக் கண்டதும், நாயின் கோபம் அதிகமாகிவிட்டது. வாயை ‘ஆ’ என்று பிளந்துகொண்டு, அவனை நோக்கிப் பாய முயன்றது. அதற்குள், ஸெதாந்தா தன் கையிலிருந்த பந்தை மேலே தூக்கினான்.. திறந்திருந்த நாயின் வாய்க்குள் ‘லபக்’ கென்று போட்டுவிட்டான்! போட்டதோடு நிற்கவில்லை; கையிலிருந்த மட்டையால் அந்தப் பந்தைத் தொண்டைக்குள் நன்றாகக் குத்தித் தள்ளி விட்டான்!

பாவம், அந்த வேட்டை நாயால் பந்தை வெளியே கக்கவும் முடியவில்லை; உள்ளே விழுங்கவும் முடியவில்லை. திணறித் திண்டாடிக்கொண்டிருந்தது. இதுதான் சமயம் என்று நினைத்த ஸெதாந்தா மட்டையால் அதன் தலையிலே பலமாக ஐந்தாறு அடிகள் வைத்தான். அவ்வளவு தான்! அந்த நாய் அங்கேயே சுருண்டு விழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/24&oldid=500578" இலிருந்து மீள்விக்கப்பட்டது