பக்கம்:வேட்டை நாய்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேட்டை நாய்


“பிரபுவே, என்னை மன்னிக்க வேண்டும். உங்களுடைய நாயை நான் வேண்டுமென்று கொல்லவில்லை. இப்போது அது இறந்து கிடக்கிறது. நான் உயிருடன் இருக்கிறேன். இல்லாவிடில், நான் இறந்திருப்பேன். அது உயிரோடு இருந்திருக்கும். நடந்ததை நினைத்து வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன்” என்று அவரைப் பார்த்துக் கெஞ்சிக் கேட்டான் ஸெதாந்தா.

அதற்குள் அரசர் பிரபுவைப் பார்த்து, “ஏதோ எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. என்ன செய்வது? வருத்தப்படாதீர்கள். இதே ஜாதியில் வேறு ஒரு வேட்டை நாய் வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

ஆனல், பிரபு அரசரைப் பார்த்து, “அரசே, நான் இதைச் சிறு குட்டியிலிருந்து வளர்த்து வந்தேன். மிகவும் நன்றியுடன் இன்றுவரை எங்கள் குடும்பம், சொத்து, சுகம், எல்லாவற்றையும் பத்திரமாகவும், வீரத்துடனும் இது பாதுகாத்து வந்திருக்கிறது. இனி, எதிரிகளுக்குக் கொண்டாட்டம்தான்! சிறு வயது முதல் இங்கே வளர்ந்ததால்தான் இது இவ்வளவு நன்றியறிதலுடன் இருந்து வந்தது. பெரிய நாயை வாங்கி எவ்வளவுதான் அன்பாக ரொட்டியும், கறியும் ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் இதற்கு ஈடாகுமா?” என்று கண் கலங்கக் கூறினர், பிரபு.

ஸெதாந்தாவுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. “நம்மால்தானே இந்தக் கஷ்டம் ஏற்பட்டது” என்று அவன் நினைத்தான். உடனே யோசனையில் ஆழ்ந்தான். ஒரு முடிவுக்கு வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/26&oldid=500580" இலிருந்து மீள்விக்கப்பட்டது