பக்கம்:வேட்டை நாய்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபூர்வ நண்பர்கள்

29



“ஏ ராஜத்துரோகி! நீ எம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசினாயாமே உண்மையா?”

“உங்களைப் பற்றி நான் கேவலமாகப் பேசவில்லை. உங்களுடைய அரசாட்சியைப் பற்றித்தான் கேவலமாகப் பேசினேன்!”

“என்ன! எம்மைப் பற்றிப் பேசினால் என்ன? எம்முடைய ஆட்சியைப் பற்றிப் பேசினால் என்ன? இது ஒரு பெருங் குற்றம் என்பது உனக்குத் தெரியுமா?”

“கொடுங்கோல் ஆட்சியை நான் எதிர்த்தேன். அதைக் குற்றம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்! நாட்டுக்காக நான் பாடுபட்டேன். அதை நாச வேலை என்று நீங்கள் கருதுகிறீர்கள். தேசத்திற்காக நான் உழைத்தேன். அது மிகவும் தீமையானது என்று நீங்கள் தீர்மானம் செய்கிறீர்கள்...”

“சட்...நிறுத்து! உனக்கு என்ன திமிர்! நீ செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா? தூக்குத் தண்டனை தான்!”

“அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சாவதற்குத் தயாராகவே வந்திருக்கிறேன்.”

“உனக்கு என்ன துணிச்சல்!... சரி, உன்னுடன் நாம் பேசவிரும்ப வில்லை. உனக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறோம்” என்று அரசன் ஆத்திரத்துடன் கூறிவிட்டு, “இவனைக் கொண்டு செல்லுங்கள்” என்று உத்தரவிட்டான்.

அதே சமயம் ஒரு காவற்காரன் அங்கு வந்து “அரசே, வணக்கம். யாரோ ஒருவர் வாயிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/31&oldid=502388" இலிருந்து மீள்விக்கப்பட்டது