பக்கம்:வேட்டை நாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேட்டை நாய்


காத்திருக்கிறார். தங்களைக் காணவேண்டுமாம்” என்று கூறினான்.

“யாரது?... சரி, உள்ளே வரச்சொல்” என்று உத்தரவிட்டான் அரசன்.

உள்ளே வந்தான், ஒரு வாலிபன். அவனைக் கண்டதும், கைதியாக இருந்தவன், “நண்பா!” என்று ஆனந்தத்துடன் வரவேற்றான்.

“ஆ! உன்னைத் தேடி......” சரியாக வாக்கியத்தை முடிக்கவில்லை வந்தவன்.

அதற்குள், அரசன் வந்தவனைப் பார்த்து, “நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? என்ன விஷயம்? உடனே சொல். உம்!......” என்று மட மடவென்று கேட்டான்.

“அரசே, இதோ கைதியாக நிற்பவன் என்னுடைய நண்பன்; மிகவும் உத்தமன். உங்களை மிகவும் வேண்டிக் கொள்கிறேன். தயவு செய்து இவனை விடுதலை செய்யுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து...... ”

“போதும், நிறுத்து. இது அரச சபை, தயவு தாட்சண்யத்திற்கெல்லாம் இங்கு இடமே கிடையாது. அவனை விடுதலை செய்ய முடியாது. அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தாயிற்று.”

“என்ன தூக்குத் தண்டனையா! என் அருமை நண்பனுக்கா ஐயோ! அவனைப் போன்ற ஓர் உத்தமனை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாதே அரசே, அவனுக்குத் தூக்குத் தண்டனை வேண்டாம். கருணை காட்டுங்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/32&oldid=502475" இலிருந்து மீள்விக்கப்பட்டது