பக்கம்:வேட்டை நாய்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேட்டை நாய்



“நண்பா, நல்ல சமயத்தில் வந்து உதவினாய். உனக்கு எந்தவித ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. எவ்வளவு சீக்கிரத்தில் திரும்பிவர, முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் திரும்பி வந்துவிடுவேன். போய் வாட்டுமா?’’

”சரி, போய் வா. என்னைப் பற்றிக் கவலைப் படாதே' என்று கூறி விடைகொடுத்தான் நண்பன். கைதி ஊரை நோக்கிப் புறப்பட்டான்.

ஒருநாள், இரண்டு நாள்,மூன்று நாள்-இப்படியே பத்தொன்பது நாட்களும் ஓடி விட்டன. இருபதாம் நாள் இரவு நேரம். அரசன் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் சிறைச் சாலைக்கு வந்தான்.

“என்ன, அவன் வந்துவிட்டானா?” என்று காவற்காரர்களைப் பார்த்துக் கேட்டான் அரசன்.

“இல்லை அரசே, இன்னும் வரவில்லை” என்றனர் காவற்காரர்கள்.

“சரி” என்று கூறிவிட்டு, சிறைக்குள்ளே இருக்கும் கைதியின் நண்பனிடம் சென்றான், அரசன். அவனைப் பார்த்துக் கேலியாக ஒரு சிரிப்புச் சிரித்தான். பிறகு பேச ஆரம்பித்தான்.

“என்னப்பா, என் நண்பன் பெரிய உத்தமன்; சொன்ன சொல் தவற மாட்டான்; சத்தியவந்தன், கட்டாயம் வந்துவிடுவான்’ என்றெல்லாம் சொன்னாயே! பார்த்தாயா, காலை வாரிவிட்டு விட்டான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/36&oldid=502479" இலிருந்து மீள்விக்கப்பட்டது