பக்கம்:வேட்டை நாய்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபூர்வ நண்பர்கள்

35

 “அரசே, அவனைப் பற்றி அப்படியொன்றும் தவறாக நினைக்காதீர்கள். ஏதேனும் எதிர்பாராமல் நேர்ந்திருக்கலாம். அதனால்தான் இன்னும் வரவில்லை. நிச்சயம் அவன் வந்து விடுவான்.”

“இன்னுமா உனக்கு அவன்.மேல் நம்பிக்கை? எவனாவது உயிரைக் கொடுப்பதற்குத் திரும்பி வருவானா? அவன் திரும்பி வருவான் என்று நான் நம்பவே இல்லை. சரி, எனக்கென்ன? அவன் வந்தால் நீ பிழைத்தாய்! இல்லாவிட்டால், நாளை உன் உடல் தூக்கு மரத்தில் தொங்கும்; உயிர் எமலோகம் போகும். இது நிச்சயம்.”

”அதற்காக நான் கலங்கவில்லை!"

* * *

மறுநாள் காலை. சூரியன் உதயமாக இன்னும் அரைமணி நேரமே இருக்கிறது.

இன்னும் ஊர் சென்றவன் திரும்பி வரவில்லை!

அவனுக்குப் பதிலாகச் சிறையில் இருப்பவனை அழைத்துக்கொண்டு வரும்படி, அரசன் உத்தரவிட்டான்.

உடனே சேவகர்கள் அவனைக் கொண்டு வந்து அரசன் முன் நிறுத்தினர்கள்.

“இன்னும் அரைமணி நேரமே இருக்கிறது. மனத்தைத் தைரியப்படுத்திக்கொள். தூக்கு மேடைக்கு நீ பலியாகப் போகிறாய். உன் நண்பன் உயிர் பிழைக்கப் போகிறான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/37&oldid=502480" இலிருந்து மீள்விக்கப்பட்டது