பக்கம்:வேட்டை நாய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபூர்வ நண்பர்கள்

37


தோரு நாட்கள் இருந்தாயே! எவ்வளவு துன்பப் பட்டாயோ! உனக்கு வீண் சிரமம் கொடுத்து விட்டேன். எனக்குப் பதிலாக உன்னை வைத்து விட்டுப் போனதே பெரிய தவறு. இதை ஊருக்குப் போன பிறகுதான் உணர்ந்தேன்.”

“நண்பா......” அதற்கு மேல் பேச முடிய வில்லை, அந்த நண்பனால்!

“நண்பா, நான் வரும்போது பெரிய புயல் அடித்தது. நான் வந்த படகு புயலில் சிக்கிக் கொண்டு கவிழ்ந்தது. கடவுள் அருள் புரிந்தார் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு கட்டையின் உதவியால் கரை சேர்ந்துவிட்டேன். அதனால்தான் தாமதம். நல்லவேளை; கடலிலே நான் மூழ்கி இறக்க வேண்டியவன்; தப்பிவிட்டேன். இல்லாவிட்டால் அங்கு நான் இறந்திருப்பேன். எனக்குப் பதிலாக இங்கு நீயும் இறந்திருப்பாய்...”

அவர்களுடைய நட்பின் பெருமையை அப்போதுதான் உணர்ந்தான், அரசன். உடனே, அவன் மனம் இளகிவிட்டது! இருந்தாற்போலிருந்து திடீரென்று எழுந்தான்.

நண்பர்கள் இருவரிடமும் ஓடிவந்தான். அவர்களை அப்படியே அணைத்துக் கொண்டான்.

“ஆஹா! உங்களைப் போன்ற நண்பர்களை நான் பார்த்ததே இல்லை! சரித்திரத்திலே படித்தது. கூட இல்லை! யாரும் சொல்லக் கேட்டது கூடக் கிடையாது! உங்களுடைய நட்புக்கு மரியாதை செலுத்துகிறேன். இனிமேல் நீங்கள் இருவரும் கைதிகளல்ல; நானும் முன்போல் கொடுங்கோல் அரசனல்ல. நீங்கள் போய்வரலாம்' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/39&oldid=502488" இலிருந்து மீள்விக்கப்பட்டது