பக்கம்:வேட்டை நாய்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தாவது படகோட்டி

41


ஏதாவது அவர்கள்மேல் குறை கூறிக் கூலியைக் குறைத்துவிடுவார்.

“உங்களுக்கு ஒரு ரூபாய் வீதம் கூலி தர முடியாது நீங்கள் இரவு பகல் 24 மணி நேரமுமா படகோட்டிக் கொண்டிருந்தீர்கள்? தினசரி இரவிலே 8 மணி நேரம் நன்றாகத் தூங்கினீர்களே! அந்த 8 மணி நேரத்திற்கு நான் கூலியைக் குறைத்துக்கொண்டுதான் கொடுப்பேன். சரியாகப் பார்த்தால், உங்களுக்கு நாள் ஒன்றுக்கு முக்கால் ரூபாய்கூட வரவில்லையே!” என்று அவர்களிடம் வீண் வழக்குப் பேசுவார்.

இப்படி ஒவ்வொரு தடவையும், ஏதாவது தகராறு செய்து கூலியைக் குறைத்துவிடுவார். படகோட்டிகள் எவ்வளவோ சொல்லிப் பார்ப்பார்கள். ஆனாலும் கொப்பாட்டும் பிடிவாதமாகவே இருப்பார். வேறு வழியில்லாததால் கொடுத்த கூலியை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

சாமான்களை ஏற்றிக்கொண்டு படகு செல்லும் போது கொப்பாட்டும் கூடவே செல்வார். ஒவ்வொரு நாள் இரவிலும், படகுகளை ஏதாவது ஒரு கிராமத்தின் அருகேயுள்ள கரையில் நிறுத்தி வைப்பார்கள். அந்த இரவுகளில் கொப்பாட்டும் சும்மா இருக்கமாட்டார். படகோட்டிகளிடம் ஏதாவது பந்தயம் பேசுவார். பந்தயத்தில் அவர்களைத் தோற்கடிக்கப் பார்ப்பார். அவர்கள் தோல்வி அடையாது போனலும், ஏதாவது வீண்வழக்குப் பேசி, அவர்கள் தோற்றுவிட்டதாகவே முடிவு கட்டுவார். அவருடைய குணம் நன்றாகத் தெரிந் திருந்ததால், அவர்கள் அநேகமாக அவருடன் பந்தயம் பேசுவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/43&oldid=502557" இலிருந்து மீள்விக்கப்பட்டது