பக்கம்:வேட்டை நாய்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேட்டை நாய்


ஒரு நாள் இரவு, ஒரு கிராமத்தின் அருகேயுள்ள கரையில் தங்கியிருந்தார்கள். அப்போது ஜனவரி மாதம், நல்ல குளிர். தண்ணீரில் கையை வைத்தால் பனிக்கட்டி போல் ‘ஜில்’ லென்று. இருக்கும்,

கொப்பாட்டும் அப்போது படகோட்டிகளிடம் “ஏ படகோட்டிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் நல்லபலசாலிகளாக இருந்து என்னபிரயோஜனம்? நான் சொல்லுகிறபடி செய்ய முடியுமா? ஒரே ஒரு சிறு துணியை மட்டும் கட்டிக்கொண்டு இந்தத் தண்ணிரில் இறங்க வேண்டும்; இறங்கி நாளைக் காலை சூரியன் உதயமாகும் வரை தண்ணிருக்குள்ளேயே இருக்கவேண்டும். அப்படி எவணாவது. இருந்துவிட்டால், நான் அவனுக்கு இரண்டு. மடங்கு கூலி தருகிறேன். அவன் தோற்றுப் போய்விட்டால், நான் பைசா கூடக் கூலி தரமாட்டேன். இதற்கு யார் தயார்?” என்று கேட்டார்

ஒருவரும் பதில் பேசவில்லை. ஒவ்வொரு பட கோட்டியாக அவர் கேட்டுக்கொண்டே வந்தார்,

‘என்னால் முடியாது’, ‘என்னால் முடியாது’ என்று ஒவ்வொருவரும் கூறிவிட்டார்கள். ஆனால், பத்துப் படகோட்டிகளும் அப்படியே கூறிவிட்டார்களா? இல்லை; ஒன்பது படகோட்டிகளே அப்படிக் கூறினர். பத்தாவது படகோட்டியை அவர் கேட்டதும், அவன்  “ஓ! நான் தயார்” என்று தைரியமாகக் கூறினான்.

உடனே சில படகோட்டிகள், “டேய், உன்னால் முடியாது. வேண்டாம்” என்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/44&oldid=502558" இலிருந்து மீள்விக்கப்பட்டது