பக்கம்:வேட்டை நாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தாவது படகோட்டி

43


இன்னும் சிலர் மெதுவாக, “டேய், உனக்குத் தான் கொப்பாட்டும் குணம் தெரியுமே! எதற்காகப் பங்தயத்தில் இறங்க வேண்டும்? வேண்டாமடா!” என்று புத்தி கூறினார்கள்.

ஆனால், கொப்பாட்டும் அவர்களைப் பேசவிடவில்லை. “அதெல்லாம் முடியாது. அவன் பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டுவிட்டான். அவன் உடனே தண்ணிரில் இறங்க வேண்டியதுதான்” என்று கத்தினார்.

உடனே, பத்தாவது படகோட்டி சிறிதும் தயங்கவில்லை. பேசாமல் ஒரு சிறு துணியைக் கட்டிக்கொண்டு கதியில் இறங்கிவிட்டான். இரவு முழுவதும் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு தண்ணீருக்குள்ளேயே இருந்தான்.

காலை மணி 4 இருக்கும். அப்போதும் அவன் குளிரைத் தாங்கிக்கொண்டு தைரியமாகவே உள்ளே இருந்தான்.

கொப்பாட்டும் பார்த்தார். “சரி, இவன் நம்மிடம் இரண்டு பங்கு கூலி வாங்கினாலும் வாங்கி விடுவான். இவனுடன் எப்படியாவது தகராறு செய்யவேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெறலாம்” என்று திட்டமிட்டார்.

உடனே, அவர் கிராமத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தார். பிறகு, தண்ணிருக்குள் இருக்கும் பத்தாவது படகோட்டியைப் பார்த்தார்.

“டேய் திருட்டுப் பயலே, நீ இவ்வளவு குளிரிலும் இந்தத் தண்ணிருக்குள் கவலையில்லா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/45&oldid=502559" இலிருந்து மீள்விக்கப்பட்டது