பக்கம்:வேட்டை நாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தாவது படகோட்டி

47


“நான் தோற்றுப் போனால், உங்களிடம் ஏழு வருஷம் அடிமையாக இருக்கிறேன். நீங்கள் தோற்றுப் போனால், உங்களுடைய பத்துப் படகுகளையும் எனக்கே தந்து விடவேண்டும்”

“சரி, அப்படியே. ஆனால், நீ வாக்குத் தவறக் கூடாது. பந்தயம் நன்றாக ஞாபகத்தில் இருக்கட்டும்.”

“சரி, நெருப்பு எங்கே?” என்று கேட்டார், கொப்பாட்டும். நெருப்பா அது எதற்கு? அது தான் அதோ, அங்கே தெரிகிறதே! இங்கிருந்து கொண்டே அந்த உஷ்ணத்தில் வறுவல் செய்யலாம். சும்மா செய்யுங்கள்” என்று தூரத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டிக் கூறினான் படகோட்டி.

“என்னடா இது! முட்டாள், அது எப்படி முடியும்? நெருப்பு எங்கோ இருக்கிறது! நாம் இங்கே இருக்கிறோம்; அந்த நெருப்பில் எப்படி வறுவல் செய்ய முடியும்?” என்று கேட்டார் கொப்பாட்டும்,

“ஏன் முடியாது, எஜமான்? அந்த உஷ்ணம் இங்கு நன்றாகப் படுவதாக நீங்கள்தானே சொன்னீர்கள்! அதில் நீங்கள் தாராளமாக வறுவல் செய்யலாம். உம், ஆரம்பியுங்கள்” என்றான் படகோட்டி,

கொப்பாட்டுமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆயினும், தோல்வியை அவர் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொண்டு விடுவாரா? ஏதேதோ வம்பு பேசினார். ஆனால், மற்றப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/49&oldid=502565" இலிருந்து மீள்விக்கப்பட்டது