பக்கம்:வேட்டை நாய்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணத்தின் மகிமை

55


“ராஜாவுக்குத் தெரிந்தால்...?”

"ஆமாம், இந்த மோதிரத்தைத்தான் அவர் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கப் போகிறாராக்கும். அவருக்கு எத்தனையோ மோதிரங்கள்! இதைப் பற்றி அவர் நினைக்கக்கூட மாட்டார்” என்று கூறிவிட்டான் ஹாஸன்.

அன்று முதல், தினசரி வீட்டுக்கு வரும் போது அரண்மனையிலிருந்து ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை அவன் எடுக்காமல் வரமாட்டான். பாத்திமாவும், “இன்று என்ன கொண்டு வரப்போகிறாரோ!” என்று ஆவலுடன் எதிர்பார்ப்பாள்.

இப்படியே இந்தத் திருட்டு வேலை பல நாள் நடந்து வந்தது. ஹாஸனும் தந்திரமாக இதைச் செய்துவந்தான்.

ஒரு நாள் ஹாஸன் தன் மனைவியிடம், “பாத்திமா, இந்த நகைகளை நாம் விற்றுப் பணமாக்கிவிடவேண்டும். ஆகையால், நான் இவைகளை ஒரு முட்டை கட்டி எடுத்துக்கொண்டு வெகு தூரத்திலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போகிறேன்” என்றான். வேண்டாம். வெளியூர் போனால் பணச்செலவு உள்ளுரிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விடுகிறேன். யாராவது கேட்டால் உறவினர் கொடுத்ததாகக் கூறிவிடலாம்” என்றாள் பாத்திமா.

”ஆமாம். நீ சொல்வது சரி” என்றான் ஹாஸன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/57&oldid=502603" இலிருந்து மீள்விக்கப்பட்டது