பக்கம்:வேட்டை நாய்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேட்டை நாய்


உறவினரிடம் பொய் கூறி, பண உதவி பெற்றீர்கள். இது இரண்டாவது குற்றம். இதற்காக உங்களை நன்றாக அடி அடி என்று தோல் உரியும் வரை அடிக்க வேண்டும். அரண்மனைப் பொருள்களைக் கொள்ளை அடித்தீர்கள். இது மூன்றாவது குற்றம். இதற்காக உங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!”.

இதை அரசன் கூறியதுமே ஹாஸனும், பாத்திமாவும் நடுநடுங்கினர்; கண்ணிர் விட்டனர்; அரசன் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.

அப்போது அரசன் அவர்களைப் பார்த்து, “ஆணால், ஒரே ஒரு நிபந்தனை. அதன்படி செய்தால், உங்களுக்கு இந்தத் தண்டனைகள் கொடுக்கமாட்டேன். அது என்ன நிபந்தனை தெரியுமா? நீங்கள் மோசம் செய்து சம்பாதித்த இவ்வளவு பொருள்களையும் நீங்களே எடுத்துக் கொண்டு வீடு செல்ல வேண்டும். ஆமாம், இப்போதே உங்கள் இருவர் கழுத்திலும் கட்டி விடச் சொல்கிறேன்” என்றான்.

இதை அரசன் கூறியதும் ஹாஸனுக்கும், பாத்திமாவுக்கும் ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் தங்களுடைய காதுகளை நம்பவில்லை. நிஜமாகவா!” என்று அவர்கள் மனத்திற்குள்ளே கேட்டுக்கொண்டனர்.

அப்போது, அரசன் மேலும் கூற ஆரம்பித்தான். “இந்த ராஜ்யத்தில் ஆணோ, பெண்ணோ, குழந்தையோ - யாராக இருந்தாலும் சரி;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/60&oldid=502607" இலிருந்து மீள்விக்கப்பட்டது