பக்கம்:வேட்டை நாய்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணத்தின் மகிமை

59


அவர்கள் இந்த இருவரிடமிருந்தும் ஒரு காசு கூட வாங்கக்கூடாது. அப்படி யாராவது வாங்கினால், அவர்களுக்கு நிச்சயம் தூக்குத் தண்டனைதான் கிடைக்கும். இது நம் உத்தரவு” என்றான்.

ஹாஸனுக்கும், பாத்திமாவுக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. “அரசர் நமக்கு எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். அத்துடன் நம்மிடமிருந்து எவரும் ஒரு காசுகூட வாங்கக் கூடாது என்றும் கடுமையான உத்தரவு போட்டிருக்கிருர். அடடா, அவர் எவ்வளவு நல்ல அரசர்! நம்முடைய பணத்திற்கு இனி எவனும் ஆசைப்படமாட்டான். கொள்ளைக்காரர்களைப் பற்றிய கவலையே இல்லை!" என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தனர்.

அன்று முதல், அவர்கள் வீட்டு வாசலில் அரண்மனைச் சேவகர்கள் காவல் புரிந்தனர். அவர்கள் போகும் இடத்திற்கெல்லாம் சேவகர்களும் கூடவே சென்றனர்.

இதனால் அவர்களை நெருங்குவதற்குக்கூடப் பொதுமக்கள் அஞ்சினர், கடையில் சென்று அவர்கள் விலைக்கு ஏதாவது சாமான் கேட்டால், கடைக்காரர்கள், “அடேயப்பா ! நாங்கள் தர மாட்டோம். உங்கள் பணத்தை வாங்கினால் எங்கள் உயிருக்கு ஆபத்து போய்வாருங்கள்” என்று கூறினர்.

இப்படியே அவர்கள் எதை வாங்கப்போனலும் கிடைப்பதில்லை. நாள் ஆக ஆக அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். பணத்தைக் கொடுக்கத் தயாராயிருந்தும் சாப்பிட ஆகாரம் கிடைக்கவில்லை; உடுக்க உடை கிடைக்கவில்லை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/61&oldid=502609" இலிருந்து மீள்விக்கப்பட்டது