பக்கம்:வேட்டை நாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணத்தின் மகிமை

61


றதா? பணம் என்பது ஒரு சின்னம்தான், அதை எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல வழிகளில் உபயோகப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதற்கு மகிமை உண்டு; நமக்கும் மகிழ்ச்சி உண்டு. பெட்டியிலோ, அல்லது பையிலோ உண்ணாமல், உடுத்தாமல் சேர்த்து வைத்திருந்தால் அதற்கும் மகிமை கிடையாது; நமக்கும் மகிழ்ச்சி கிடையாது. இப்போதாவது இதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றான்.

“ஆம் அரசே, ஆம். இப்பொழுது நன்றாகத் தெரிந்து கொண்டோம்” என்றனர் ஒரே குரலில் ஹாஸனும் பாத்திமாவும்.

அரேபியக் கதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/63&oldid=502611" இலிருந்து மீள்விக்கப்பட்டது