பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

99

அறிவியல் மாணவர் தாம் ஒரே ஒரு தென்மொழியை அஃதாவது மாநாடு நடைபெறப் போகும் செய்தி வெளிவந்த தென்மொழி சுவடி 10 ஓலை 1- ஐத்தான் முதலில் படித்ததாகவும் அதையும், மதுரைச் சுப்பிரமணியபுரம் கிளை நூலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பார்த்ததாகவும், அத் தென்மொழியில் வந்த தமிழக விடுதலை மாநாட்டுச் செய்தியே தம்மை மிகவும் கவர்ந்ததாகவும்; தாம் தென்மொழி படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் நூலகம் மூடவிருந்ததாலும் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு இரண்டொரு நாளில் நடக்கவிருந்ததை அறிந்ததாலும் அவ்விதழை நூலகத் தினின்று திருடிச்சென்று முழுவதையும் படித்து விட்டு மாநாட்டிற்கு ஓடிவந்திருப்பதாகவும் கூறினார். அவர்தம் அறிவுணர்ச்சித் திருட்டையும், அஞ்சாமை யையும், திறமையையும். தமிழுணர்வையும் பாராட்டி அவரைத் தலைவராக அமர்த்தினார்கள். திரு. இராசசேகரன் தாம் தலைவராக அமர்த்தப் பெற்றமைக்கு நன்றி தெரிவித்து மாநாட்டைத் தொடங்கினார். திருவாளன்மார் எழிற்கண்ணன், பெ.வெற்றிக் கூத்தன், இரா. பாவாணன், புலவர் சா. அடல் எழிலன், த. அரிமா வளங்கோ, ந. அரணமுறுவல், தரங்கை- பன்னிர்ச்செல்வன், புலவர். சரவணத் தமிழன் முதலியோர் உரையாற்றினர், இன்றைய நிலையில் தமிழ்க்குமுகாயம் அடைந்துள்ள சீர்கேடு, சீர்கேட்டுக்குக் கரணியம் அவற்றை நீக்குவது எப்படி என்பன பற்றி விளக்கமாகச் சொல்லி இறுதியில் தமிழகம் நாவலந்தீவினின்று விடுதலை பெற்றால் தான் தமிழ்க்குமுகாயம் சீர்கேடுகளினின்று விடுதலை பெறும் என்பதை வலியுறுத்திப் பேசினார்கள்.

கோவை மாவட்ட தி.க. தலைவர் வழக்குரைஞர் கசுத்தூரி அவர்கள் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை விளக்கியும் தமிழகம் விடுதலை பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் உரையாற்றினார்கள்.

'கைகாட்டி' ஆசிரியர் பேரா. தமிழ்க்குடிமகனார் பேசுகையில் மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க தெனறும் பிரிவினை கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கச் சட்டமும் அரசியல் சூழலும் உள்ள நேரத்தில் தமிழக விடுதலை கேட்டு மாநாடு நடத்தும் அமைப்பாளரின் திறம் பாராட்டிற்குரியதென்றும், மற்று பிரஞ்சுப் புரட்சியில் பயன் பெற்ற 'கில்லட்டின்' கருவி போன்று தமிழக விடுதலைக்கும் ஒன்று தேவையென்றும்; நாட்டிலே சொல்லித்திருத்துவதற்கு ஒரு கூட்டமும் உதைத்துத் திருத்துவதற்கு