பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேண்டும் விடுதலை

ஒரு கூட்டமும் தேவையென்றும்; மதுரையிலிருந்து வெளிவரும் 'தினமணி' இதழில் தியாகராயர் கல்லூரி மாணவர்கள் போராடியதாலேயே ஆட்பெயருக்கு முன் 'ஸ்ரீ' யை நீக்கி , 'திரு' வைப் பயன்படுத்துவதாகவும் தியாகராயர் கல்லூரி மாணவர் செய்தது போல் சென்னை மாணவர் செய்யாததால் சென்னையினின்று வெளிவரும் 'ஸ்ரீ தினமணியில்' என்று வட மொழி அடையையே தொடர்ந்து அதன் ஆசிரியர் பயன்படுத்துவதாகவும் பேசினார். மேலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு தனி அரசியற் கட்சி தொடங்கினால் தேர்தலில் போட்டியிட்டுச் சட்ட மன்றம் வழியேயும் தமிழக விடுதலைக்குக் குரல் எழுப்பலாம் என்றும் அவ்வாறு கட்சி தொடங்கினால் தாம் துணை நிற்பதாகவும் சொன்னார்.

தமிழ் மறவர் புலவர். வை. பொன்னம்பலனார் பேசுகையில் இன்று தமிழகத்தில் தமிழர்களுக்காக எந்த நேரமும் எண்ணிக்கொண்டு செயலாற்றும் பொதுத் தொண்டர் ஒருவர் பெரியாரென்றும் மற்றவர் பெருஞ்சித்திரனாரென்றும், அவர் தம் மாணவராக இருந்தமைக்குத் தம் உள்ளம்மிகப் பூரிப் படைவதாகவும் சொன்னார். இம்மாநாட்டிற்குப் பெரியார் வந்திருந்தால் நன்றாயிருந்திக்குமென்றும், ஆனால் மாநாட்டில் முடிவெடுக்கும் தீர்மானத்தைப் பெரியாரிடம் காட்டி அவருடைய துணையைப் பெறத் தாம் முயற்சி செய்யப்போவதாகவும், பெருஞ்சித்திரனார் தமக்கென்று ஒரு வழியை ஏற்படுத்திக்கொண்டு புரட்சியுடன் செயலாற்றுவதாகவும் சொன்னார். சில் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் ஆரியப் பார்ப்பனர்களால் எவ்வாறு இழிவு படுத்தப் பெற்றனர் என்பதையும். எவ்வாறு பெரியாரின் தொண்டு மக்களின் இழிவைத் துடைக்கப் பயன் பெற்றது என்றும், தமிழர்கள் முழுமையாக மேம்படவேண்டுமென்றால் கோயில்களையும் கடவுள்களையும் அறவே ஒழித்தாக வேண்டும் என்றும் ‘பெருஞ்சித்திரனார்’ ஏனோ இறைவனிடம் சிக்கிக் கொண்டாரென்றும் பேசினார். மேலும் பேசுகையில் தனித்தமிழ் இயக்கம் எப்பொதெல்லாம் முளைவிட்டதென்றும், தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கை எப்பொதெல்லாம் கிளப்பப்பெற்ற தென்றும் பல நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டிப் பெரியாரின் தொண்டுகளை எடுத்துக் கூறினார்.

அதன்பின் மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ் சித்திரனார் உணர்வெழுச்சி மிக்க ஓர் உரையாற்றிக் குமுகாய