பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வேண்டும் விடுதலை

தமிழுணர்வும் , தமிழக விடுதலைக் கருத்துகளுமே மிகுதியும் புகுத்தப்பெற்றிருந்தன. நாடகத்தில் வீர உணர்வு இழையோடிற்று. அவ்வுணர்வுக்குத் தக்க அனைவரும் சிறப்பாக நடித்திருந்ததோடு அன்றி வெங்காளூம் அன்பர் இசைத்த 'கிதார்’ப் பின்னிசை இசை உணர்வுக்கு உணர்வு ஊட்டுவதாக சிறப்பாக அமைந்திருந்தது. நாடகத்தில் திருவாளன்மார் மணிவேங்கை விட்டுணு, பன்னீர்ச்செல்வன். இரா. மன்னன், பீர்முகம்மது, சிவநேசன், நடராசன், செல்வி. பிரேம்குமாரி ஆகியோர் நடித்தனர். மாநாட்டுக்கு வந்திருந்த அன்பர்களும் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களும் நாடகத்தைப் பாரட்டிப் பேசிக் கொண்டனர். இரவு 12 மணியளவில் நாடகமும் குமுகாய மாநாடும் முடிவுற்றன.

அரசியல் மாநாடு

ஞாயிற்றுக்கிழமை (11-6 -1972) காலை 9. 30 மணியளவில் அரசியல் மாநாடு தொடடங்ற்று. மாநாட்டின் முதல் கட்டமாக மாணவர் அரங்கமும் இரண்டாவதாக மகளிர் அரங்கமும் நிகழ்ந்தன. இவ்விரு அரங்குகளுக்கும் மாநாட்டு செயலாளர் புலவர் . இறைக்குருவனார் தலைமை தாங்கினார், செல்வி மா. தேன்மொழி தமிழ் வணக்கப் பாடல் பாடினார். மாணவர் அரங்கத்தில் திருவாளன்மார் வே. மு. பொதிய வெற்பன், கோ. திருநாவுக்கரசு, அரிமா மகிழ்கோ, ஆ. மதியழகன், ஆடலரசு, அன்பழகன், பாமகன், கரிகாலன், சிவந்த பெருமாள் ஆகியோர் பேசினர். இவர்கள் பேசுங்கால், மாணவர்கள் தமிழில் ஆழமான அறிவைப் பெற வேண்டும் என்றும்; அயல் நாடு செல்ல நேரின் அவ்வறிவால் தமிழின் மேன்மையைப் பரப்ப வேண்டும் என்றும் அவ்வத் துறையில் உள்ள மாணவர்கள் அவ்வத் துறையில் முதிர்ச்சியடைய வேண்டும் என்றும்; மாணவரிடையே தமிழக விடுதலை உணர்வு நன்றாகப் பரவி வருகிறதென்றும்; எனவே ஆட்சியாளர்கள் கேட்பதைக் கொடுக்க அணியமாக இருக்க வேண்டுமென்று எச்சரித்தும்; வடமொழிக்கும் இந்திக்கும் நடுவணரசினர் செலவிடுவதைக் கண்டித்தும் உரையாற்றினர்.

மகளிர் அரங்கில் திருவாட்டிமார் இறை. பொற்கொடி. உலகமுதல்வி, தாமரைபெருஞ்சித்திரன் ஆகியோர் பேசினர். அவர்கள் பேசுகையில் தமிழகத் தாய்மார் ஒவ்வொருவரும் தம் பிள்ளைகட்கு