பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வேண்டும் விடுதலை

செய்தித்தாள், வானொலி, பிற பொழுது போக்குகள் எனும் ஐந்து துறைகளிலும் தூய தமிழ் மொழியையும் உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழியையுமே கையாள வேண்டும் என்றும், அவ்வகையில் அவ்வத் துறையினர் இதுவரை கையாண்டு வரும் பிறமொழிக் கலவை நிலையைக் கைவிட வேண்டுமென்றும்.

மேற்காட்டிய இரு சார்பின் ஒன்பான் துறைகளிலும் ஏதாவதொரு சமயமோ, குலமோ, (சாதியோ) பெயரளவிலும் செயலளலும் கையாளப் பெறுதல் கூடாதென்றும், அவ்வகையில் அவ்வத்துறையிலும் இதுவரை கையாளப்பெற்று வரும் சமய குலப் பெயர்கள், அவை தழுவிய நடை முறைகள் ஆகியவற்றை அறவே கைவிட வேண்டுமென்றும் இம்மாநாடு தொடர்புடைய எல்லாரையும்கேட்டுக்கொள்கின்றது.

செயற்பாடு:

இக்குறிக்கோளின்படி இம் மாநாட்டில் அமைக்கப் பெற்ற தமிழக விடுதலை இயக்கம் இன்றிலிருந்து 1975 மே மாதம் வரை உள்ள காலத்தை வேண்டகோள் காலம் (Period of entreaty or period of Suppalication) ஆகக் கொண்டு, இவ்வியக்கம் வகுக்கும் திட்ட முறைப்படி செயலாற்று மென்றும் அச்செயல் முறைகளால் பயன்காணாவிடத்து, 1975 சூன் முதல் 1978 மேவரை உள்ள காலத்தைப் போராட்டக் காலம் (Period of Agitation ஆக அறிவித்து இயக்க முறைகளுக்குக் கேற்ப போராடுமென்றும் அப்போராட்டத்தாலும் பயன்கானா விடத்து, 1978 சூன் முதல் தொடங்கும் காலத்தைப் புரட்சிக் காலம் (period of Revaolution ஆக அறிவித்து இக்கொள்கை வெற்றி பெறும் வரை பலவகையாலும் நேரடிச் செயல்களிலும் வன்முறையிலும் ஈடுபடுமென்றும் உறுதிச் செய்வதுடன் தொடர்புடையவர்களையும் எச்சரிக்கின்றது.

தீர்மானம் -2

(11-6-72 அன்று நடைபெற்ற அரசியல் மாநாட்டின் (poiltical conference) இறுதியில் நிறைவேற்றப் பெற்றது.)

குறிக்கோள் : தமிழக விடுதலை.

இக்குறிக்கோளின் அடிப்படையில் இப்பொழுது உள்ள தமிழ் நாட்டையும், புதுவை, காரைக்கால் ஆகிய தமிழ் நிலப் பகுதிகளையும் தன்னுள் அடக்கி முழு ஆட்சி செய்து வரும் நடுவணரசு