பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

117



 
தமிழ்க் குமுகாயம் என்றொரு
குமுகாயம் இன்று இருக்கிறதா?


★ பள்ளி மாணவர்களிடம் மதத்தையும் குலத்தையும் கேட்பது எதற்கு?

★ தமிழுணர்வு பரவாமல் தமிழனை முன்னேற்றிவிட முடியாது.

★ மொழி இல்லாமல் இனம் இல்லை, இனம் இல்லாமல் மொழி இல்லை.

★ பகைவர்களே எச்சரிக்கையாய் இருங்கள்; தமிழன் விழித்துக்கொண்டான்.

★ திருச்சி குமுகாய மாநாட்டில் பெருஞ்சித்திரனார் முழக்கம்!

தாய்மார்களே! பெரியோர்களே! தனித்தமிழ் அன்பர்களே

இப்போது மாநாடு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காலையிலிருந்து இந்த நகரத்தையே அலைக்கழித்த அந்த ஊர்வல ஒலிகளுக்கும் இப்போது இதுநேரம் வரை உங்கள் காதுகளிலே விழுந்துகொண்டிருந்த அந்தப் புரட்சி மொழிகளுக்கும் ஒரு விடிவான வழியை அமைத்துக்கொடுக்க இருக்கின்ற ஒரே ஒரு தீர்மானம் நிறைவேறுவதுடன் இன்றைய மாநாடு முடிவடைகிறது. அந்தத் தீர்மானத்திற்கு முன் இந்த மாநாடு, குமுகாய மாநாடு. என்றழைக்கப் பெற்றதற்கும் இங்குப் பேசியவர்கள் குமுகாய,