பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

119

அல்லது கும்பிடாமல் இருக்கிறான். அதைப்பற்றி என்ன? அவனிடம் உன் அகவை என்ன? படிப்பென்ன? எங்குப் படித்தாய்? யார் உன் பெற்றோர் என்று வேண்டுமானால் கேட்கலாம். மதம் என்ன? சாதி என்ன? என்று ஏன் கேட்க வேண்டும்? என்ன தேவை வந்தது?

சாதி, மதம் வேண்டாம் என்று பெரியார் பேசுகிறார்; எழுதுகிறார். ஆனால் அவற்றை உடனே எடுக்க வேண்டாம் என்கிறார். நம்மவனெல்லாம் படித்து வரட்டும்; அப்புறம் எடுக்கலாம். இல்லையென்றால் பார்ப்பானே படித்து வந்து கொண்டிருப்பான் என்கிறார். இவனெல்லாம் எப்போது படித்து முடிப்பது? இவற்றை எப்போது எடுப்பது? ‘சாதி’யை ஏன் குறிக்க வேண்டும்? ‘தமிழன்’ என்று ஏன் குறிக்கச் சொல்லக்கூடாது? அப்படிக் குறித்தால் பார்ப்பானும் ‘தமிழன்’ என்று போட்டுக் கொண்டு படிக்க வந்து விடுவான் என்கிறீர்களா? பார்ப்பான் ஒரு போதும் தன்னைத் தமிழன் என்று குறிப்பிட முன்வரமாட்டான். அப்படியே குறிக்கிறான் என்று தெரிந்தால், அந்த மாணவன் பூணூல் போட்டிருக்கிறானா? என்று சட்டையைக் கழற்றச் சொல்லிப் பார்ப்பது? இல்லையென்றால் அவனுடைய வீட்டுக்குச் சென்று அவனுடைய பெற்றோர் பூணூல் போட்டிருக்கின்றனரா என்று ஆய்வு செய்தால் என்ன கெட்டுப் போய்விடும்? பள்ளிக்கூடச் சுவடியில் மாணவனின் சாதியையும், மதத்தையும் குறிப்பிடும் வரை இவ்விரண்டையும் ஒழிக்கவே முடியாது. பள்ளிக் கூடச் சுவடியிலிருந்து நீக்கிவிடுவரென்றும் முடியாததன்று; முடியக் கூடியதே. அப்படிச் செய்தால் சாதி மதம் தன்னாலேயே ஒழிந்து விடும்; அதை விட்டுக் கோயில் குளங்களைப் போய், இடிக்க வேண்டியதில்லை. எல்லாம் அடிப்படையில் தாம் செய்ய வேண்டும் நாம் 'விளம்பரப் பலகையைத் தமிழில் எழுதுங்கள்’ என்று கத்திக்கொண்டு ஒரு மாநாடே கூட்டியிருக்கிறோம். என்ன பயன்? 'ராயல் சில்க் ஹவுஸ்' என்று விளம்பரம் எழுதியிருக்கிறான். அதை மாற்ற முடிந்ததா? முடியவில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கடைக்கு உரிமம் வழங்கும் போது, அந்த வேண்டுகோள் படிவத்தில் ‘பெயரைத் தனித் தமிழில் எழுத வேண்டும்’ என்ற சிறு குறிப்பு போட்டால் போதும். எல்லாம் தமிழிரேயே எழுதி விடுவார்கள் இதைப்போல் அடிப்படையில் மாற்றம் செய்தல் வேண்டும்.

சாதி, மதம் ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம் . ஆனால் அவை ஒழிய வேண்டும் என்று எவருக்கும் விருப்பம் இல்லை. இங்கு வந்திருக்கும். தி.க. வினரைக் கேட்கிறேன்; பள்ளியில் உங்களுடைய