பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

121

கோவை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ககத்துரி அவர்கள் பேசுகையில் தனித்தமிழ் மட்டும் வந்துவிட்டால் போதுமா என்று கேட்டார்கள். அவர்கட்குச் சொல்வேன்; சான்றாகத் தினமணியில் 'கல்வி வசதிகளை விஸ்தரிக்க முடிவு’ என்று போடுகின்றான். பார்ப்பான் எழுதுகிறான். இப்படி 'விடுதலை' ஏன் அப்படி எழுத வேண்டும்’?. தினமணி அலுவலகத்திலிருந்தே தனித்தமிழ்க் கொள்கையைப் பற்றித் தெரிந்து போக 4 பேர் வந்தனர். அவர்கள் படித்துப் பட்டம் பெற்றவர்கள். அவர்களுடன் 2 மணிநேரம் பேசியிருப்பேன். அவர்கள் போகும் போது "இதைச் சொல்லுங்கள்” என்று சிவராமனுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தனுப்பினேன். இன்னும் கொஞ்ச நாட்களில் தன் போக்கைத் தினமணி மாற்றிக் கொள்ளவில்லையானால் அலுவலகம் இருந்த இடம் தெரியாமல் போகும். என்று! இன்று சொன்னால் தினமணி அலுவலகம் நாளை இல்லாமல் போய்விடும். ஒற்றர்கள் குறித்துக் கொள்ளலாம். தினமணி மட்டுமன்று வேறு எந்த அலுவலகமும் இருக்காது. நாளை புரட்சியான ஒரு தீர்மானம் வருகிறது. செயல் திட்டம் சொல்லட்டும் என்று ஐயா சொன்னார்கள்; நாளை சொல்லப் போகிறேன். கசுத்துரி அவர்கள் தனித்தமிழ்ப் போராட்டத்திற்குச் செயல் திட்டம் அறிவித்தால் தம் பிள்ளையை அனுப்ப அணியமாக இருப்பதாகச் சொன்னார்கள். இது எப்படி? இதிலிருந்து தாம் அணியமில்லை என்று சொல்லிவிட்டார்கள். இந்தக் காலத்துப்பிள்ளை தந்தை சொல்வதைக் கேட்கும் படியாகவா உள்ளான்? தனித்தமிழ்ப் போராட்டமா? உங்களைத்தானே வரச்சொன்னார்; என்னை எதற்குக் கூப்பிடுகின்றீர்கள் என்றல்லவா கேட்பான். செயல் திட்டமென்றால் பெரியார், அண்ணா அறிவிக்காத திட்டமா? அவர்கள் செய்யாத போராட்டமா? இன்று இராமனைப் பெரியார்தான் காப்பாற்றுகிறார். இராமாயணத்தில் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. எவனும் இன்று இராமாயணம் படிக்கவில்லை. இராமாயணத்தில் ஒன்றுமில்லாததால் தான் கம்பன் அதைப் பாவிய உணர்ச்சியோடு எழுதினான். இராமாயணப் பெயர்கள் தனித்தமிழில் இல்லை. தனித்தமிழில் அவற்றை விளக்கிவிட்டால் எவனும் அதைப் படிக்கமாட்டான். பெரியார்தான் இன்று இராமாயண ஆராய்ச்சி, இந்த ஆராய்ச்சி என்று புத்தகம் போட்டுப் பரப்புகிறார். இராமாயணத்திற்கும் தமிழனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இராமாயணம் விந்திய மலையைத் தாண்டிவரவில்லை இராவணன் இலங்கையில் இருக்கவுமில்லை; அநுமன் சீதையைப் போய்ப் பார்க்கவும் இல்லை இது வரலாறு. இதை எந்த வாரியாரும் மறுக்க முடியாது.