பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வேண்டும் விடுதலை

பெருமைப் படுத்தவே நினைக்கிறோம். நாமெல்லாம் பெரியாரை விட ஒருபடி மேலே உயர வேண்டும். மொழி இல்லாமல் இனம் இல்லை இனமில்லாமல் மொழியில்லை. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவை. நம் மொழி அழிந்திருப்பின் இனமும் அழித்திருக்கும், தமிழ்மொழி சிறந்தது. எனவே அதை அழிக்க முடியவில்லை.

ஓரளவுக்காவது துணிந்து சொல்வது என்று வந்து விட்டோம். இன்னும் நிலை எப்படிப் போகுமோ? யாரும் சொல்ல முடியாது நாளைய திட்டத்திலே 6 ஆண்டுக்கால எல்லை வகுக்கப்பட்டிருக்கிறது. திரு. கோ. து. (நாயுடு) 5 ஆண்டுகள் கேட்டார். ஆனால் இங்கு ஆறாண்டுகள் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறாண்டுகளை மூன்று தகுதியாகப் பிரித்திருக்கிறோம். மூன்றாந் தகுதியில் தான் புரட்சி விளையும். அப்போது தான் நீங்கள் சொல்லுகிறபடி தினமணி கொளுத்தப் பெறும் (கைதட்டல்) எந்தெந்தக் கட்டடங்கள் வங்காளத்தில் வீழ்ந்தனவோ, அதே போலக் கட்டடங்கள் இங்கும் பார்த்தழிக்கப்படும் (உரத்த கைத்தட்டல்) எங்கெங்கு அரத்த ஆறு ஓடியதோ, அதேபோல் இங்கும் ஓடும். (தொடர்ந்த கைதட்டல்) இங்கு யாரும் சளைத்தவர்கள் இல்லை. வேண்டுமானால், உங்களுடைய உள்ளங்களிலே எப்படி இருக்கிறதோ, தெரியவில்லை. எங்கள் உள்ளங்களிலே இதுதான் இருக்கிறது நாளைக்குச் சில நிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; அவ்வளவே. கருவிகளைச் செய்து கொண்டிருக்கும்போதே சண்டைக்கு வா என்று கூப்பிடுகிறாய்; கருவியைக் கொஞ்சம் தீட்டிக்கொண்டு வருகிறோம் என்று சொல்கிறோம். நாங்கள். வேறொன்றும் இல்லை ? எண்ணம், செயல் எல்லாம் நடக்கும். நீங்கள் வங்காளத்தை என்ன பார்க்கிறீர்கள்? இங்கே பாருங்கள். பெரியார் குடுமியை அறுக்கச் சொல்லுவேன். என்று சொன்னார். திருவரங்கத்தில் 2 பார்ப்பான் குடுமியை அறுக்கவே அறுத்தார்கள். இது 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, ‘விடுதலை' யில் வந்தது; குளித்துக் கொண்டிருந்த 2 பார்ப்பனர் குடுமிகள் காணாமற் போயின. ஆனால் பெரியார் மறுநாளே அறிக்கை விட்டு விட்டார் யாரும் அப்படிச் செய்யக் கூடாதென்று இங்கு நாங்கள் அறுங்கள் என்று சொல்லவும் மாட்டோம்; நிறுத்துங்கள் என்று சொல்லவும் மாட்டோம், தாமே குடுமிகளெல்லாம் காணாமற் போகிற நிலை ஒன்று வரும். நான் இருந்தாலும் சரி, இல்லாமற் போனாலும் சரி; சுட்டுப் பொசுக்கினாலும் சரி; வருகிறது! எச்சரிக்கையாய் இருங்கள். தமிழர்களுக்கும் சொல்கிறேன். இனி எப்பொழுதும் தமிழன் தூங்கிக் கொண்டே இருக்க மாட்டான்;