பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

127

அன்பர்களே! இந்தத் தீர்மானத்தைச் சற்றுக் காது கொடுத்துக் கேட்கக் கேட்டுக் கொள்கின்றேன். ஒரு தீர்மானத்திற்கு இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று குறிக்கோள். மற்றொன்று செயற்பாடு. இதுவரை யாரும் இப்படித் தீர்மானம் போடவில்லை. ஐயா (புலவர் வை. பொன்னம்பலனார்) அவர்கள் குறிப்பிட்டது போல் ஒரு புதிய முறையில் போடப் பெற்றிருக்கிறது. தீர்மானம் போட்டால் அதை நிறைவேற்ற வழி இருக்க வேண்டும். (தீர்மானத்தைப் படிக்கத் தொடங்குகிறார்கள்) 'குறிக்கோள்' தமிழ்மொழி, குமுகாய விடுதலை, இக்குறிக்கோளின் அடிப்படையில், தமிழகத்தின் அரசுச் சார்பில் உள்ள ஆட்சி, அலுவல், கல்வி, தொழில் எனும் நான்கு துறைகளிலும்; தனியார் சார்பிலுள்ள பொதுவாழ்வியல், (பொது வாழ்வியல், தனிவாழ்வியல் என்றால் என்ன என்று பின்னர் விளக்குவேன்) வாணிகம், செய்தித்தாள், பிற பொழுது போக்குகள் எனும் ஐந்து துறைகளிலும். (இப்போது 'பொழுபோக்குகள்’ என்பதை விளக்கத் தொடங்கித் திரைப்படத்தின் இழிவை எடுத்துரைக்கின்றார்கள்) என் அருமை நண்பர் திரு. சரவணத் தமிழன் அவர்கள் திரைப்படத்தின் இழிவுகளை உங்கள் முன்னே நன்றாக விளக்கினார்கள் ஆனால் அவர் சொன்னது மிகக் குறைவே. நீங்கள் சென்னைப் பக்கம் போய்ப் பார்த்தால் எல்லாம் தெரியும் அதுவும் வேறெங்கும் போக வேண்டாம் விடுமுறை நாட்களிலே கல்லூரிப் பகுதிகளுக்குச் சென்றால் போதும் அங்குப் பாலியல் உணர்வுப் படங்கள் மாணவர்களுக்குக் காட்டப் பெறுகின்றன. நாம் இங்கே குமுகாய மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம்; அங்கே ஒரு பெரிய இனத்திற்கே குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? பார்ப்பான் ஒரு நாளில் 23 மணி நேரமும் திரைப்படம் முதலானவற்றில் ஈடுபட்டு ஒரு மணி நேரம் படிப்பில் கவனம் செலுத்தினாலும் தேறிவிடுவான். ஆனால் நம் பையனோ 23 மணி நேரமும் படித்து, ஒரு மணிநேரமும் வீணடித்தாலும் தேறமாட்டான். இது உண்மை, என்னுடைய வாயில் அறிவுத் தொடர்போ, உளத்தொடர்போ இல்லாமல் சொற்களில் வருவதில்லை. நான் பெரிய இவன் என்று சொல்லிக் கொள்ளவில்லை உண்மை இன்று புரியாதிருக்கலாம். நாளை புரியும். அப்போது எண்ணி வருந்துவீர்கள். அந்த நிலைக்கு உங்களை ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். அதனால் தான் வன்முறையைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறேன். அப்போது வாயால் சொல்ல மாட்டோம்: முதலிலேயே சொன்னேன். பாட்டெழுதுகின்ற கை மட்டுமன்று கருவியும் செய்யும் என்று சொன்னேன். அதிலே பல குறிப்புகள் இருக்கின்றன.