பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

129

துறையில் கூட நான் சொன்னால் திருப்பு நிலை வரும் (கை தட்டல்). ஏதோ சும்மா கத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைக்காதீர்கள் நான் இவ்வளவு துணிவாகப் பேச் முடியாது. என்னவோ செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். வங்காளத்தில் நடந்ததில் நூற்றில் ஒரு பங்கு தான் வெளிவந்தது. அங்கு நடந்தது வேறு: செய்தித்தாளில் வந்தது வேறு. நாம் இவ்வளவு பெரிய மாநாடு நடத்துகிறோமே, எவ்வளவு செய்தி வரும்? ஒரு காமகோடி பீடாதிபதி மதுரை மண்ணில் கால் வைத்தும் மதுரையெல்லாம் மணந்தது என்று எழுதுகிறான் அதையும் நாம் படித்துக்கொண்டு மூடர்களாக இருக்கிறோம்.

ஆரியர்களுக்கு உண்மையாகவே கேடுகாலம் வந்துவிட்டது. ஆரியர்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன், என்னென்ன நடக்கும் என்று சொல்ல முடியாது, ஒழுங்காக அவனுடைய பூணூலை இன்றைக்கே கீழே கழற்றி வைத்துவிட வேண்டும். அவனுடைய குடுமி தப்பித் தவறி 'இப்பி' க்குடுமியாக இருந்தாலும் நான் அவனுடையது என்றுதான் நினைத்துக் கொள்வேன் (கைத்தட்டல்) ஏன் தெரியுமா? அவன்தான் பெரும்பாலும் 'இப்பி' யாக இருக்கிறான் அவர்களெல்லாம் அடுத்த கப்பலிலேயே போகப் போகிறார்கள். அது தான் அமெரிக்கப் பழக்கங்களை யெல்லாம் பழகுகிறார்கள். இராசாசி முன்பே சொல்லிவிட்டார். நாங்கள் இந்த நாட்டை விட்டு விரைவில் போகிறோம் என்று விளையாட்டில்லை.; உண்மையாகவே போகத்தான் போகிறார்கள். உங்களுக்கு அவனைப் பற்றிக் கவலை வேண்டா, நம்மைப்பற்றிக் கவலைப்படுவோம். போதிய காலம் அமைந்து விட்டது. அதனால்தான். இவ்வளவு நாள் அமைந்திருந்தேன். இதை நேற்றே செயற்குழுக் கூட்டத்தில் சொன்னேன்.

பெரியார்தான் விரைவில் செயல்படக் காரணமாக இருந்தார். பிரிவினையைத் தள்ளிப் போட்டிருக்கிறேன் என்று இதே திருச்சியில் பேசுகையில் சொன்னார். நம்மவர்கள் ஆள்கிறார்கள் இந்திராவிடமிருந்து அதிகாரம் கேட்டுச் சில நிலைகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். இப்படிப் பட்ட ஒருவர் இனி நமக்குச் செய்யப் போகிறார் என்று நினைத்தால் நம்மைப்போல் ஒரு குருட்டுத் தனமான கொள்கையை உடையவர் வேறு எங்கும் இருக்க முடியாது. இளைஞர்கள் நாம் உடலில் சூடு ஆறிப்போகும் முன் சிலவற்றைச் செய்ய வேண்டும். இப்பொழுதே சிலநிலைகளில் தளர்ந்து போய் இருக்கிறோம். இன்னும் தளர விரும்பவில்லை.