பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

135

வேளும், திரு. ஓடை. தமிழ்ச்செல்வனும் அடிக்கடி கூடி, மாநாட்டுப் பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற உழைத்து வந்தனர். திரு. க. வெ. நெடுஞ்சேரலாதனும், திரு. அரசமணியும் இரவு பகல் பாராது செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அறிக்கைகள் பலவாறு விளக்கமாகவும் சுருக்கமாகவும் அச்சிடப் பெற்றுப் பரப்பப் பெற்றன. ஆங்கில அறிக்கையும் அச்சிடப் பெற்று, நடுவணரசு அமைச்சர்கள் சிலர்க்கும், ஆங்கிலச் செய்தியிதழ்களுக்கும் அனுப்பி வைக்கப்பெற்றது. மாநாட்டுச் செய்திகள் தென்மொழி, தமிழம், தீச்சுடர், வலம்புரி ஆகிய இதழ்களின் வாயிலாகவும் பரப்பப் பெற்றன. இருப்பினும் மாநாட்டுத் தொடர்பாகச் சுவரொட்டிகள் ஏதும் அடிக்கப் பெற்று முன் கூட்டியே விடுக்கப் பெறாதது பெருங்குறையாக விருந்தது. போதுமான பொருள் வலிவு இருந்திருந்தால் செய்திகளை இன்னும் முன் கூட்டியும் விரிவாயும் பரப்பிருக்க முடியும் என்று செயற்குழு குறைபட்டுக் கொண்டது. ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டுதானே செயலாற்ற முடியும். மாவட்ட அளவில் ஒதுக்கப்பெற்ற குறியீட்டுத் தொகை சரிவரத் தண்டப்பெறவில்லை. பெகும்பகல்லா இளமாறன், நெய்வேலியன்பர்கள். கோவை நித்தலின்பன் போலும் மெய்யன்பர்கள் தம் பொறுப்பில் அளித்த தொகைகளுடன், மாநாட்டுச் செயற்குழு மதுரையளவில் தாமே புரட்டிக் கொண்ட தொகைகள் தாம் மாநாட்டு அடிப்படைச் செலவுகளைச் செய்யவுதவின. எத்தனையோ இன்றியமையாச் செலவுகளுக்காக வரவேற்புக் குழுத் தலைவரும், செயலரும் தம் தம் உடைமைகளைக் கூட அடகுக் கடைகளில் வைக்க வேண்டியிருந்தது. மாநாடு தொடங்கினால் பட்டினி கிடந்தாகிலும் பணம் தண்டுவோம்; மடியேந்தியாகிலும் படியளப்போம்’- என்றவர்களெல்லாரும் வாயினால் அளந்தார்களே தவிர மாநாட்டுக் கடைசிநாள் வரைக் கையினால் அளக்கவில்லை. தமிழனுக்கு இவ்வகையில் என்றைக்குத் தான் சுறுசுறுப்பும் நம்பிக்கையும் வருமோ, தெரியவில்லை. பொருள் வலிவும், குழுவலிவும் இல்லெனில் எவ்வளவு சிறந்த திட்டங்களும் இடைமுறிந்து விடும் என்பதை இத்துறையில் ஈடுபட்ட எல்லாருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இவ்விடத்தில் இன்னொன்றையும் கூற வேண்டியுள்ளது.

நம்மில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நம்க்குள் நாமே வேறுபட்டுக் கிடக்கின்றோம். நாம் செய்வதில் 'இது சொத்தை; இது சொள்ளை' என்று கூறிக்கொண்டு வேறு பிரிந்து போவாரை இன்னும்