பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வேண்டும் விடுதலை

பங்குக்கு வந்து படையல் போட்டுக் கொண்டு பழுது கூறும் அவர்களைக் காலந்தான் காட்டிக்கொடுக்க வேண்டும். மற்றப்படி அவர்களை முகங்காட்டுவதும் முறியடிப்பதும் நம் வேலையன்று.

மேற்குறிப்பிட்ட இடையூறுகள் நம் இயக்கத்தில் மட்டுந்தான் இருப்பதாக எவரும் கருதிக் கொள்ளக்கூடாது. பத்துப்பேர் சேர்ந்து செய்யும் எந்தப் பணியோ, தொண்டோ, விழாவோ, கட்சியோ, கழகமோ எதுவாக விருந்தாலும் இவ்வத்தனை எதிர்நிலைகளும் எழவே செய்யும். இந்நிலை இயற்கையின் தேர்வுநிலைக் கொள்கையை அடியொட்டியது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் இடையில் எவன் துணிந்து, சலிப்புறாமல், சோர்வுறாமல் தன் வினையைச் செய்கின்றானோ அவனே அதற்குத் தகுதியானவன் என்பதை மக்கள் கண்டுகொண்டு, அவனைப் பின் பற்றித் தாங்களும் முன்னேறிக் கொள்ள வேண்டுமென்பது இயற்கை வகுத்த சட்டம். எனவேதான் இந்நிலைகளுக்கெல்லாம் நாம் என்றும் மனஞ்சலித்ததில்லை. இனி, இன்னும் இதில் விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மைகளும் பலவுள. அவை மெய்யறிவுக் குட்பட்டவை யாதலால் இங்குக் காட்டப்பெற வேண்டியதில்லை.

இனி, மதுரை விடுதலை மாநாட்டுச் செயற்குழுவின் திட்டப்படி எல்லா வினைப்பாடுகளும் முன் பின்னாகவோ, ஒன்றுக் குத்தலாகவோ படிப்படியாகச் செய்யப் பெற்று வந்தன. அன்பர்கள் நெடுஞ்சேரலாதனும், அரசுமணியும் முனைந்து ஈடுபட்டிலரேல் மாநாடு நடைபெற்றிருக்குமா என்பது ஐயமே! எப்படியோ மாநாடு குறிப்பிட்ட நாளில் நடைபெறுவதை, இடையில் எத்தனையோ இடர்ப்பாடுகள் குறுக்கிட்டும், தள்ளிப்போட முடியாமற் போய்விட்டது. .

மாநாட்டுக்கு ஒரு கிழமைக்கு முந்தியே அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் மதுரைக்குப் போய் பாசறையமைத்துக் கொண்டு, எல்லாச் செயல்களையும் நேரில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார். மாநாட்டுக்கு முந்தின நாளே வெளியூர் அன்பர்கள் பலர் வரத் தொடங்கிவிட்டனர். நம் மாநாட்டு அலுவலகத்தைத் தேடிப்பிடிப்பதுதான் பலருக்குத் தலைச்சுற்றலாகப் போய் விட்டது. மாநாட்டு அலுவலகத்தை ஏனோ தெரியவில்லை. நம் செயற்குழு ஒரு சந்தில் கொண்டு போய் அமைத்திருந்தது. ஆனாலும் வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் பலரும் மனஞ்சலியாமல் ஆங்காங்கு அவரவர்களின் ஏந்துகளுக்குத் தக்கபடி, பல்வே