பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

139

றிடங்களிலும் தங்கிக் கொண்டனர். 8ஆம் பக்கல் வெள்ளி யிரவே மாநாட்டுக் கூட்டம் கலகலக்கத் தொடங்கி விட்டது. மதுரை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றிருந்தன. மாநாட்டில் பெரியார் கலந்து கொள்வதாக விருந்தபடியால், அறிவிப்புகளில் அவர் பெயர் கொட்டை யெழுத்துகளில் போடப் பெற்றிருந்தன. மாநாட்டு நாளன்று மதுரை பல்வகைச் சிறப்புகளையும் எதிர் நோக்கிக் காத்திருந்தது. முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வர் அன்றைய நாள் ஒரு திருமணத்திற்கெனவும் வேறு சிறப்புக் கூட்டம் ஒன்றிற் கலந்து கொள்ளவும் வந்திருந்தார். பெரியாருக்கு நம் மாநாட்டு நிகழ்ச்சியோடு வேறு ஒரு பொதுக் கூட்டமும் , அருப்புக்கோட்டையில் ஒரு திருமணக் கூட்டமும் இருந்தன. அ.தி.மு.க தலைவர் ம.கோ.இரா. வேறு ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வழியாக அன்று போக வேண்டியிருந்தார். அவர் அன்றைய நாள் மதுரையில் தங்குவதென ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. இம் மூவகை நிகழ்ச்சிகளுக்காகவும் காவலர்கள் மாநாட்டுக்கு முந்தின நாளிலிருந்தே பல முடுக்கமான பணிகளை யமர்த்திக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். இந்நிலையில் நம் மாநாட்டு ஊர்வலத்துக்கு எங்கு இசைவு கிடைக்காமற் போய்விடுமோ என ஐயுற்றிருந்தோம். நல்ல வேளை வரவேற்புக் குழுத் தலைவர், செயலாளர் போலவே இங்கும். அங்கும் ஓடி, இவரையும் அவரையும் பார்த்து, ஊர்வலத்திற்கும் மாநாட்டிற்கும் இசைவுகளை வாங்கியே விட்டார்.

மாநாட்டுக்கு முந்தின நாள் இரவு தட்டிகள், பதாகைகள், தூக்குத் தட்டிகள் முதலியனவற்றை எழுதுவதிலும் ஆங்காங்குக் கொண்டு போய் வைப்பதிலும், கட்டுவதிலும் அன்பர்கள் பலரும் முடுக்கமாக ஈடுபட்டிருந்தனர். புலவர். திரு. இறைக்குருவனார் தம் ஆசிரியப் பணிகளுக்கிடையில், மாநாட்டு வினைப்பாடுகள் சிலவற்றில் தாமே ஈடுபடுவதிலும் கருத்தறிவிப்பதிலும் முனைந்திருந்தார். வெங்காளுரிலிருந்து நாடகக் குழு வந்து இறங்கியிருந்தது. கொடிகளும் மார்பொட்டிகளும் ஊர்வலத்திற்கென அணியமாகிக் கொண்டிருந்தன.

வெள்ளி(8-6-73) இரவு 8 மணிக்கு முன்பே அறிவித்தபடி மேலமாசி வீதியிலுள்ள 'அப்சரா' விடுதியின் 1-ஆம் எண் அறையில் ‘தென்மொழியன்பர்’ கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏறத்தாழ முப்பதுபேர் வந்திருந்தனர். அக்கால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் மூன்று மாதங்களுக்கு ஒன்றாகவும் தட்டுத்தடுமாறி வெளி வந்து கொண்டிருக்கும் தென்மொழியின் இப்பொழுதைய