பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேண்டும் விடுதலை

நிலை, அதற்குள்ள கடன் சுமைகள், அது தொடர்ந்து வந்தாக வேண்டிய தேவை முதலியவை பற்றியெல்லாம் அன்பர்கள் முன்னிலையில் ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனாரும். தென்மொழி அமைச்சர் திரு. அன்பழகனும் எடுத்து விளக்கினார்கள். இடையிடை திரு. இறைக்குருவனாரும் நிலைகளை விளக்கினார். அதன்பின், தென்மொழி அடுத்து வரவிருக்கின்ற புதிய அமைப்புப்பற்றி அன்பர்கள் கருத்தறிவிக்கக் கேட்டுக் கொள்ளப் பெற்றனர். விளம்பரங்கள் ஏற்பது பற்றியும். அட்டைப்படம் பற்றியும், உள்ளே வெளியிட வேண்டிய செய்திகள் பற்றியும் கருத்துரைகள் பரிமாறிக் கொள்ளப் பெற்றன. இறுதியில் "எவ்வாறேனும் சிறப்பாகவும், இடையீடின்றியும் கொண்டு வர எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்றும், தனித்தமிழிலோ தனி ஆங்கிலத்திலோ தரும் விளம்பரங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும், பொது மக்களும் விரும்பிப் படிக்கும் படியான செய்திகளைத் தரவேண்டும் என்றும் முடிவுகள் செய்யப் பெற்றன. கூட்டம் 11-30 மணியளவில் முடிந்து அன்பர்கள் மாநாட்டு அமைப்பாளர் பெருஞ்சித்திரனாரவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றனர்.

மறுநூாள் காரி (9-6-73) காலைக்குள் பல ஊர்களிலிருந்தும் அன்பர்கள் கூட்டங் கூட்டமாகவும் குடும்பங் குடும்பமாகவும் மதுரைக்கு வந்து சேர்ந்தனர். கருநாடகம் மைசூர், கேரளா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும். மலேயாவினின்றும் மாநாட்டிற்காக அன்பர்கள் சிலர் வந்திருந்தனர். பொருள் வலிவிருந்து நன்றாக விளம்பரம் செய்யப் பெற்றிருந்தால். உண்மையிலேயே விடுதலை உணர்வுள்ள அன்பர்கள் பல்லாயிரக் கணக்கில் வந்து சேர்வர் என்பதுறுதி. இவ்விடத்தில் ஓருண்மையை அன்பர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

பொதுவாகவே ஓரியக்கத்திற்கு மூன்று வலிமைகள் வேண்டும். முதலாவது அவ்வியக்கம் கொள்கை வலிமை படைத்ததாகவிருத்தல் வேண்டும். இரண்டாவது அந்தக் கொள்கையை நன்றாக அறிந்து உறுதியுடன் ஏற்றுச் செயற்படுத்துகின்ற உறுப்பு வலிமை படைத்ததாக விருத்தல் வேண்டும். மூன்றாவதாக, அவ்வுறுப்பினர்கள் தான் வகுத்துக் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வினையாற்றப் போதுமான பொருள் வலிமை படைத்ததாக விருத்தல் வேண்டும். இம்மூன்று வலிமைகளிலும் தொய்வின்றி இயங்கும் இயக்கமே தான் கொண்ட கொள்கையில் படிப்படியாக வெற்றிபெறும். இம்மூன்று வலிமைகளுக்குமான அளவிடென 100 என்று கொண்டால், முதலாவதாகிய