பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

145

காவல் அதிகாரி அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டாராயினும், எவ்வகையானும் பிரிவினை பேசுவது கூடாதென்றும், அதைச் சட்டம் ஒப்புக்கொள்ளவில்லை யென்றும் கூறி, ஊர்வலத்தை மேலே செல்ல விடாமல் தடுத்தார். பிறகு இதுபற்றி மேலதிகாரிகளிடம் பேசுவதாகக் கூறி, காவல் இயங்கியில் இருந்தவாறே தொலைபேசி வழியாக அரைமணி நேரத்துக்கும் மிகுதியாக அவர்களுடன் உரையாடி விட்டுப் பின் திரும்பி வந்து அமைப்பாளரிடம் “வேண்டுமானால் மாநிலத் தன்னாட்சி வேண்டும் என்று முழக்கமிடுங்களேன். அவ்வாறு செய்தால் நாங்கள் விட்டு விடுகின்றோம். நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நம் முதலமைச்சர் இன்று இங்கு வருகிறார். அவருக்கு வீண் தொல்லைகளை நீங்கள் உண்டாக்க வேண்டாம். மாநிலத் தன்னாட்சிக் கொள்கை அவருடையக் கொள்கையாகவும் இருக்கிறதில்லையா?” என்றார் துணை காவலதிகாரி,

அதற்கு அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் ‘அக்கொள்கை முதலமைச்சருடையதாக இருக்கலாம்; எங்களுக்குத் தனிக் கொள்கை உண்டு; அதுவே தமிழகம் தில்லி ஆட்சியினின்று பிரிய வேண்டும் என்பது. எனவே எங்கள் கொள்கைபபடி தமிழக விடுதலை முழக்கங்களைத்தான் எழுப்புவோம்’ என்றார். அதன்பின் அதிகாரி மீண்டும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளச் சென்றார். உடனே அமைப்பாளர். “இன்னும் பத்து நிமையங்களுக்குள் இசைவு தராவிடில் நாங்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்துவோம்” என்றார். காவல் அதிகாரி தொலைபேசியில் உரையாடி விட்டு “உங்களுக்கு ஊர்வலத்திற்காகவும் மாநாட்டிற்காவும் கொடுக்கப்பட்டிருந்த இசைவு மறுக்கப்பட்டு விட்டது” என்றார். அதற்கு அப்படிச் சொல்வது முறையற்றது. நாங்கள் முறைப்படி இசைவு பெற்றுத்தான் பெருத்த பொருட் செலவில் இந்த ஊர்வலத்தையும் மாநாட்டையும் ஏற்பாடு செய்துள்ளோம். இப்பொழுது இசைவை மறுப்பது உங்கள் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டும்” என்றார் அமைப்பாளர். “இல்லை. நீங்கள் தென்மொழிக் கொள்கை மாநாடுதான் என்று இசைவு கேட்டுள்ளீர்கள். இப்பொழுது விடுதலை முழக்கங்களை இடுவது தவறில்லையா?” என்றார் அதிகாரி, உடனே பெருஞ்சித்திரனார், "தென்மொழிக் கொள்கை என்பது தமிழக விடுதலைதான். அப்படித்தான் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கைகளை வைத்துத்தான் இசைவுக்கும் எழுதியிருந்தோம். நீங்கள் அதைச் சரியாகக் கவனிக்காமல் விட்டு