பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

147

பின்பு, அங்கேயே மாநாடு தொடங்கலாம் என அமைப்பானர் அறிவித்தார். அன்பர்கள் அனைவரும் அமைதியுடன் ஒருபுறமாக வந்து அமர்ந்து கொண்டனர். தொடக்கத்தில் பெகும்பகல்லா (நீலமலை) நா. இளமாறன் அவர்கள் தாமே இயற்றிய விடுதலைப் பாடல்களை உரத்த குரலுடனும் எடுப்பான இசையுடனும் வீறுணர்வுடனும் பாடிக் காவல் நிலையத்தையே அமைதிப்படுத்தினார். முதலமைச்சரின் மதுரை வரவுக்காகவும், திரைப்பட நடிகர் இராமச்சந்திரனின் வரவுக்காகவும் ஏற்கனவே காவலர்கள் வெளியூர்களினின்றெல்லாம் வரவழைக்கப் பெற்றுக் காவல் நிலையத்தில் அடைந்து கிடந்தனர். அவர்கள் அனைவர்க்கும் காவல் நிலையத்தில் நடந்த விடுதலை மாநாட்டு நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சியும் உணர்ச்சியும் தருவதாக விருந்தன. இளமாறனின் விடுதலைப் பாடல்களைக் கேட்டு அவர்கள் தங்களையே மறந்திருந்தனர். நம் அன்பர்களும் ஊக்கமும் உணர்வும் பெருகத் துணிவுடன் அமர்ந்திருந்தனர்.

விடுதலைப் பாடல்களுக்குப் பின் திருவாளன்மார் பாவிசைக் கோ(வெங்காலூர்), சி. இராசாங்கம்(தஞ்சை), அ. மு. சம்பந்தம் (வழக்குரைஞர் - திருச்சி), அறவாழி (வெங்காலூர்), இராவணன் (கூடலூர் - மதுரை), தமிழநம்பி (திருக்கோவிலூர்-தெ.ஆ), ந. அரணமுறுவல் (மஞ்சப்புத்தூர் -தெ-ஆ), பொற்செழியன் (வெங்காலூர்) ஆகியோர் சொற்பொழிவாற்றினர். அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் அனைவர் பேச்சுகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இடையில் வந்திருந்தவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் பதிந்து கொண்டிருந்த காவல் அதிகாரிகளிடம் போய்க் கவனித்துக் கொண்டிருந்தார். பேச்சு தொடர்ந்தது.

முதலில் பேசிய திரு. பாவிசைக்கோ, இவ்வியக்கம் தோன்றிச் சில ஆண்டுகள் ஆகிவிட்ட தென்றும் பெரியாரை விட்டு அண்ணாத்துரை பிரிந்திருக்காமலும், பிரிந்த பின்பு இந்தியை எதிர்த்த மாணவர்களை வலக்காரமாக அடக்காமலும் இருந்திருந்தால் விடுதலை இயக்கம் நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் பெரியாரால் விடுதலை வாங்கித்தர இயலாதென்றும், மாநாடு நடத்துவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால்தான். தாம் முன்பு நடந்த (திருச்சி) மாநாட்டிற்கு வரவில்லையென்றும், உணர்வுபெறப் பெருஞ்சித்திரனாரை நம்பிக் கொண்டிருக்கக் கூடாதென்றும், அவர் செத்தாரா இருக்கிறரா என்றுகூடக் கவனிக்கவும் கவலைப்படவும் வேண்டிய தில்லையென்றும், அவரவரே தனித் தனியாகச் செயல்பட வேண்டுமென்றும்;