பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

15


பிரிவினைத் தடைச் சட்டம்

ங்குப் பிரிவினை பற்றிப் பேசப் பெறுகின்றதோ, அங்கு பிரிவினைக்குத் தக்க பொருட்டுகள் இருக்கும் என்பதையும் எங்குப் பிரிவினைக்குத் தடையிருக்கின்றதோ அங்கு விடுதலை வேட்கை மிகும் என்பதையும், வெள்ளையர் ஆட்சியிலும் அதை எதிர்த்துத் தன்னாட்சி நிறுவிய பேராயக்(congress) கட்சி வரலாற்றிலும் இன்னும் பிற உலக நிகழ்ச்சிகளிலும் நாம் தெளிவாகக் கண்டோம்.

எங்கும் பிரிந்து போக விரும்புவார் சிறுபான்மையராக விருப்பதையும், பிரிந்து போகத் தடையிடுவார் பெரும்பான்மையராக விருப்பதையும் நாம் அறிவோம். இப்பெரும்பான்மையரிடமிருந்து சிறுபான்மையினர் பிரிந்துபோக விரும்புவது ஏன்? இதற்கு வெறும் உணர்ச்சியும் மேலோட்டமான எண்ணமும், சட்ட திட்டங்களில் வலிந்த கட்டுக் காவல்களால் தகர்த்தெறியத் தக்க காரணங்களுமே அடிப்படையாக விருக்க முடியாது. பெருத்த அரசியல் வரலாற்று மொழி, பண்பாட்டு அடிப்படையிலேயே ஒரு சாரார்க்கு விடுதலை வேட்கை பிறக்கும். அவை பொருட்டே ஒரு கூட்டம் அவ்விடுதலை வேட்கைகையத் தடுக்க முயற்சி செய்யும்.

உலகியல் முறைப்படி ஒருவர் பிரிவு கேட்டதோ, இன்னொருவர் அதைத்தடுத்து ஒற்றுமையை வலியுறுத்துவதோ குற்றமாகாது. ஆனால் விடுதலை வேட்கையினர் தாறுமாறான வழிகளில் அதனை வற்புறுத்துவதோ, ஒற்றுமை விரும்புவார் ஆணை அடக்குமுறைகளால் அதனைத் தடுக்க முயல்வதோ தான், தமக்கும் நாட்டுக்கும் சொல்லொணாக் கேடுகளைப் பயக்கும்.

அண்மையில் இந்திய அரசியலார் கொண்டுவர விருக்கும் பிரிவினைத் தடைச் சட்டம், எதிர்காலத்தில் என்றேனும் ஒரு நாள் இந்தியா பற்பல வகையில் பிளவுண்டு போகும் என்பதற்கே