பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

வேண்டும் விடுதலை

இனியும் அவன் அடிமையாய் வாழ விரும்பவில்லை. இழிபிறவியாய், என்றென்றும் சூத்திரனாய் வாழ்ந்துவந்த அவன் இனிமேலும், பிராமணியத்திற்குக் கீழ்ப்பட்டவனாய், வடவராளுகையின் கீழ் வல்லடிமைப்பட்டவனாய் வாழ விரும்பவில்லை எல்லாத் தளைகளினின்றும், எல்லா அடிமைப் போக்கினின்றும். தன்னை விடுவித்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டான். எப்பாடு பட்டேனும் இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் உரிமை பெற்ற ஒருவனாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டான்.

அவனின் அத்தகைய முருகிய முனைப்பால் பல கட்டுகள் ஒவ்வொன்றாய்த் தெறிக்கத் தொடங்கிவிட்டன. அவன் கை விலங்குகளும், கால் விலங்குகளும் ஒவ்வொன்றாய் உடைபடத் தொடங்கி விட்டன. இனி அவனை உலகின் எந்த ஆற்றலாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது; எந்த வல்லரசாலும் அவனை மீண்டும் அடிமைக் கூட்டுக்குள் தள்ளிவிட முடியாது. அவன் இனி அரசரால் தனியன் உறவால் இனியன்; தண்டமிழ் நாடு அவனுடையது. உரிமைக் கொடி அவன் ஆளுமைக் கோட்டத்தில் பறக்கத் தொடங்கிவிட்டது.

கடந்த காலத்தில் அவன் தன் உரிமை முழக்கத்தைத் தில்லியின் இரும்புக் கதவுகளும் பிளக்கும் வண்ணம் வானதிர முழக்கிக்காட்டினான்; 1972-இல் திருச்சியில் முதல் விடுதலை மாநாடு தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு) நடந்தது. 1973இல் மதுரையில் தன்னுரிமைத் தந்தை பெரியார் துணையுடன் 2ஆவது மாநாடு நடந்தத் திட்டமிடப்பெற்று முயற்சிகள் நடந்தன. ஆனால் அரசின் அதிகார வல்லாண்மையால் மாநாட்டு முன்னணியாளர்கள் பதினொருவர் நடந்துகொண்டிருந்த ஊர்வலத்திலேயே வளைத்துச் சிறைப்பிடிக்கப் பெற்று முயற்சிகள் முறியடிக்கப் பெற்றுன. வகுக்கப்பெற்ற வரலாற்று விடுதலைப்போராட்டக் கொள்கைத் திட்டப்படி, அம்முயற்விகளின் தொடர்ச்சியாக, இக்கால் அதன் 3ஆவது தமிழகப் பிரிவினை மாநாடு வரும் சூலை 13 ஆம் நாள் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் நடத்தத் திட்டமிடப் பெற்றள.

மாநாடு அன்று மாலை 6 மணியளவில் சென்னைக் கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் அடக்க மேடைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கும் இடையில் உள்ள மணல் வெளியில் நடத்தப்பெறும் அதற்கு முன் அன்று காலை 6 மணியிலிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விடுதலை அணிகள் புறப்பட்டு வீறு தெறிக்கும் இடி