பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வேண்டும் விடுதலை


 
மூன்றாவது விடுதலை மாநாட்டுக்கு
முன்னும், பின்னும்.


ன் சிங்கைச் செலவால் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு ஓராண்டுத் தள்ளிப் போனதேனும், கோவையில் நடைபெறுவதாக இருந்த மாநாடு தமிழகத்தின் தலைநகராகிய சென்னையிலேயே நடந்தது, அக் காலத்தாழ்த்தத்தை ஈடு செய்தது. வெறும் மாநாடுகள் போடுவதும், கூட்டங்கள் நடத்துவதுமே நம் நோக்கமன்று, ஆனால், மக்கள் மனத்துள் நம் நோக்கம் பற்றிய கருத்துகளை மலர்த்துவிப்பதற்கு அவற்றைவிட வேறு வழியில்லை. மேலும், நெடுங்கால வல்லடிமைத் துய்ப்பாலும் மடித்துயிலாலும், ஈக மனப்பாங்கின்மையாலும், நம் இனத்துக்கே உரிய உள்ளரிப்பாலும், இந்நாட்டில் மக்கள் புரட்சி அத்துணை எளிய முயற்சியன்று. ஏனோ தானோ என்று கொள்கைகளை விளங்கிக் கொண்ட உள்ளங்களும், சிறைக்கஞ்சும் போக்கும் எந்த வினைப் பாட்டுக்கும் அத்துணை எளிதில் வளைந்து கொடுப்பதில்லை. இதனாலேயே இங்குக் கொளுத்தப்பெற்ற எல்லாவகை உணர்வுகளும் பயனற்றுப் போகின்ற ஒரு புன்மை நிலையை நாம் நன்கு உணர முடிகின்றது.

எனவே வழக்கம்போல் கூட்டிய இந்த விடுதலை மாநாடும் எதிர் பார்த்த பயனை நல்கவில்லை. கடந்த ஆண்டுகளில் திருச்சியிலும், மதுரையிலும் நடந்த மாநாடுகளை விட இந்த மாநாட்டில் ஒரு திருப்பம் இருந்தது. பிரிவினைக் கொள்கையைத்