பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வேண்டும் விடுதலை

நேர் எதிர் நடவடிக்கையாக, நீல, சிவப்பு வண்ணத்தில் என் பெயரை முன் வைத்து அடித்துச் சிறு அளவில் ஒட்டப் பெற்றிருந்த சுவரொட்டி, அவ்விதழ்களின் கருத்தை மாற்ற அத்துணையளவு பயன் படவில்லை. அடியாரின் இந்த நடவடிக்கையால் மாநாட்டு முயற்சிகளில் முன் கூட்டியே தொய்வு விழுந்துவிட்டது. அவரின் அந்த நடவடிக்கையும், அடுத்தடுத்துச் சிறைக்கு வெளியிலும், சிறைக்குள்ளும் அவர் நடந்து கொண்ட நடவடிக்கைகளும், ஏற்கனவே திட்டமிட்டுச் செய்யப் பெற்றனபோல் எனக்குப்பட்டன. மேலும், அக்கட்சித் தொடர்பற்ற நம்பகமான நடுநிலையாளர் சிலரிடமிருந்தும், அவர் நம் இயக்கத்தைப் பிளவுப்படுத்த வேண்டியே விடுக்கப்பெற்றவராக நமக்குக்கிடைத்த செய்திகளை உறுதிப் படுத்துவது போல் அவர் நடவடிக்கைகள் இருந்தன.

சிறைக்குப் போகுமுன்பே கிடைத்த தொடக்கச் செய்திகளை நான் பொருட்படுத்தாமற் போனதற்கு அவர் என்பால் வைத்த பேரன்பும், பெருமதிப்புமே கரணியங்களாக விருந்தன. அவற்றை யடியொட்டி அவர் தம் நீட்டோலை நாளிதழில், நெஞ்சந் திறந்து, நெஞ்சோடு பேசியதாக வெளியிட்ட கருத்துரையை நான் பெரிதும் மதித்தேன்; நம்பினேன். ஒருவேளை அவ்வுரை உண்மையாகவே இருந்திருந்தாலும், அவர் நம் கொள்கையையும், நம் விடுதலை மறவர்களின் உள்ளங்களையும், பதமும் ஆழமும் பார்ப்பதுபோல் அவர் சிறைக்குள் நடந்துகொண்ட முறைகளும் கொள்கைக் கட்டுப்பாடுகளுக்கு மாறாகச் செயல்பட்ட தன்மைகளும் அவரின் தாய்க்கட்சியின் மேல் அவர் கொண்ட பற்றையும், பாசத்தையுமே காட்டின. அத்தகைய அவர் உணர்வில் கூட நான் களங்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், அவர் சிறையில் வெளிப்படையாக தம் கட்சிக் கொள்கைகளையும் இளமையுள்ளங்களுக்கு இனிப்பான சில செய்திகளையும் பேசி, நம்முடன் சிறைப்பட்டிருந்த சில இளந்தை நெஞ்சங்களைத் திசை திருப்பியது தான் எனக்குப் பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தன.

அரசியல் கட்சி ஈடுபாடுடையவர் எப்படி இயங்குவார் என்பதை தான் நன்கு உணர்வேன். அதிலும் தி.மு.க உணர்வுடைய பலரை உள்முகமாகவும், வெளிமுகமாகவும் நான் நன்றாக அறிவேன். இருப்பினும் தி.மு.க. மேல் எனக்கு வெறுப்பில்லாமலிருந்ததால் எதற்கும் நான் மனம் சோர்ந்து போகவில்லை. ஆனால் கடந்த