பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

187


 
தனித்தமிழ் நாட்டுச் சிக்கலை மிகக்
கடுமையாக எதிர்நோக்க வேண்டியிருக்கும்!

நடுவணரசுக்குப் பாவலரேறு எச்சரிக்கை!

மிழர்கள் உலகில் மிகவும் பழைமையான இனத்தைச் சேர்ந்தவர்கள், தொன்மையான நாகரீகம் படைத்தவர்கள். இன்றைக்கு உலகில் உள்ள நாகரீகங்கள் அனைத்திலும் அவர்களது நாகரீகத் தாக்கம் இல்லாத ஓர் இன நாகரீகமே இல்லை. அதுபோலவே அவர்களின் கலையியலும் பண்பாட்டியலும் மிகமிகப் பழைமையானவை. அவர்களது மொழியும், உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் மூல முதன்மையானது. சமசுக்கிருத மொழி எவ்வளவு பழைமையானதோ, அதைவிடப் பத்து மடங்கு பழைமையானது தமிழ் மொழி. சமசுக்கிருதத்தில் தமிழ் மொழியின் சொற்களும் சொல் முலங்களும் எண்பது விழுக்காட்டிற்கும் அதிகம். இத்துணைப் பழைமையும் சிறப்பும் முதன்மையும் வாய்ந்த மொழியையும், தொன்மைப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் படைத்த அதன் இனத்தையும் இன்று, அரசியலாலும், பொருளியலாலும், குமுகாயத்தாலும், கலை, பண்பாட்டாலும், மொழியாலும் அடிமைப்படுத்தி அழித்துக் கொண்டிருக்கின்றது ஓர் இனம் என்றால், இஃது எத்துணை இரங்கத்தக்க கொடுமை வாய்ந்த ஒர் உண்மையாக இருக்கிறது. உலகில் தமிழினம் அவ்வாறு கொடுமைப்படுத்தப்படும் நாடுகள் இரண்டு. ஒன்று தமிழ்நாடு மற்றொன்று இலங்கை

இந்திய ஒற்றுமை, பாரதப் பண்பாடு என்றெல்லாம் பெருமை பேசித் தமிழையும் தமிழினத்தையும் நாலாந்தர ஐந்தாந்தர நிலையில் வைத்துள்ளது. இந்தியா, இதன் முழு ஆட்சியையும் ஆரியம் தன் தந்திரத்தாலும், அரசியல் சூழ்ச்சியாலும், மதப் புரட்டுகளாலும்