பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

201


 
இந்தியாவின் ஒற்றுமை, தேசிய இனங்களின்
உரிமையில்தான் ஏற்படமுடியும்!


ந்திராகாந்தி எவருக்கும் கட்டுப்படாத ஒரு முழு வல்லாண்மை அதிகாரிபோல் செயல்பட்டு வருவது, இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் அவரின் நோக்கத்துக்கு நேர் மாறான விளைவை உண்டாக்கக் கூடியது. எதற்கெடுத்தாலும் அடக்குமுறைப் பாணியைக் கையாளும் அவரின் ஆட்சி உத்தி பாராட்டக் கூடியதன்று. குமுகாய அறிவியல் சிந்தனையற்ற அவரின் வெறி ஆளுமைப் பேர்க்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. படைத்துறையை அவர் மனவிருப்பதிற்குகந்தவாறு பயன்படுத்துவது, அவரின் அரசியல் முன்னறிவைக் காட்டாது. நாட்டில் பல்வேறு சீர்திருத்தம் மண்டிக்கிடக்கின்றபொழுது, அவரின் அரசியல் கையாளுமையால், மேலும் மேலும் வறுமையும், குமுகாயக் கொடுமைகளும் சட்டப் புறம்பான செயல்களுமே தீவிரமடைகின்றன.

தேசிய இனங்களின் எழுச்சியைக் குமுகாயக் குற்றமாக மதித்து அதை அழித்து ஒழித்துவிட நினைக்கும் அவரின் தன்னதிகார வெறிப் போக்கால் நாடே சிதைந்து சீர்குலையப்போகிறது. ஆட்சிப் பகிர்வால் ஏற்பட விருக்கும் ஆக்க நிலைகளை அவர் சிந்திக்க மறுக்கிறார். ஏறத்தாழ ஐம்பது கோடி ஏழை மக்களைத் தேசிய ஒருமைப்பாடு, என்னும் கற்பனைப் படுகுழியில் இறக்கிப் பட்டினி போட்டுக் கொல்லப் பார்க்கிறார். இந்திரா. இதற்கு, பஞ்சாப் சிக்கலைப் பகடைக்காயாகவும் துருப்புச் சீட்டாகவும் பயன்படுத்தப் பார்க்கிறார்.