பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வேண்டும் விடுதலை

எடுத்துக்காட்டி, இச்சிக்கல்களையெல்லாம் தீர்ப்பதற்குத் தமிழக மக்கள் விடுதலை என்பதே ஒரு கட்டாயக் கடமையாக இருக்கிறது என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

எனவே, இக் கூட்டணி எடுத்துக் கொண்ட மிக மிகக் கடுமையானதும் மிகவும் சுமையானதுமாகிய இக் குறிக்கோள்களுக்குச் செயல் வடிவம் நல்கிட தமிழகத்து இளைஞர்களையும், தொழிலாளர்களையும், உழவர்களையும், பிற அனைத்துத் தரப்பு மக்களையும், தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி அறைகூவி அழைக்கிறது! வாழ்க கூட்டணி! வளர்க புரட்சி! வெல்க மக்களியக்கம்! விடுதலை பெறுக தனித்தமிழ்நாடு!

— தமிழ்நிலம், இதழ் எண். 49, திசம்பர், 1984